மணப்பெண்ணை தோளில் தூக்கி ஆற்றைக் கடந்த மணமகன்! - viral
🎬 Watch Now: Feature Video
மணமகளை தோளில் தூக்கிக் கொண்டு மணமகன் ஆற்றைக் கடந்த சம்பவம் பிகாரில் நடந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாநிலத்தில் கனமழை வெளுத்துவாங்குகிறது. இந்நிலையில், அங்குள்ள கிஷான்கஞ்ச் வழியே ஓடும் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் புதுமண தம்பதியர் ஆற்றை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் குடும்பத்தாருடன் படகில் ஆற்றை கடந்தனர். அப்போது ஆற்றுக்குள் இறங்க சிரமப்பட்ட மணப்பெண்ணை கணவர் குண்டுகட்டாக தோளில் சுமந்து சென்றார்!