விமானப் படை வீரர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து! - PM MODI - Tweet -Air Force Day, expresses gratitude to our air warriors - families.
🎬 Watch Now: Feature Video
முப்படைகளில் ஒன்றான இந்திய விமானப்படையின் 87ஆவது ஆண்டுவிழா இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், 'இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய விமானப்படை வீரர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு நமது தேசம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது. இந்திய விமானப்படை அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் இந்தியாவுக்கு தொடர்ந்து சேவையாற்றும்' எனக் குறிப்பிள்ளதுடன் ராணுவ வீரர்களை பெருமைப்படுத்தும்படி ஒரு காணொலி காட்சி இணைத்து பதிவிட்டுள்ளார்.