'நீரின்றி அமையாது உலகு' - பிரதமர் மோடி - முறையற்ற நீர் மேலாண்மை
🎬 Watch Now: Feature Video
டெல்லி: மக்கள் தொகைப்பெருக்கம், முறையற்ற நீர் மேலாண்மை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அதிகரித்துவரும் தண்ணீர் பஞ்சத்தை குறைக்க மத்திய அரசு 'ஜல் ஜீவன் மிஷன்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் கூறியுள்ளார்.
பேசிய அவர், 'நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவரின் குறளையும், பிற சான்றோர்களின் கருத்துகளையும் எடுத்துக்காட்டி தண்ணீர் பஞ்சத்தைப் போக்கி அனைவரின் வீட்டுக்கும் தண்ணீரைக் கொண்டு செல்லும் ஜல் ஜீவன் திட்டத்தை மோடி அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் அறிவித்தார்.