சுண்ணாம்பு துண்டுகளில் தேசிய கீதம் - சாதனை படைத்த இளைஞர் - சுண்ணாம்பு
🎬 Watch Now: Feature Video
கர்நாடகா: பாசகுலியில் உள்ள கெருசோப்பா பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் மஞ்சுநாத் நாயக், 17 சுண்ணாம்பு துண்டுகளில் தேசிய கீதத்தை செதுக்கி இந்திய சாதனை புத்தகம், ஆசிய சாதனை புத்தகம் ஆகியவற்றில் இடம்பிடித்துள்ளார். இதுமட்டுமில்லாது தபேளா வாசிப்பு, ஓவியம் வரைதல் ஆகியவற்றிலும் பிரதீப் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அவரது தந்தை மஞ்சுநாத் நாயக், தாய் சந்திரகலா ஆகியோர் இதற்கு உறுதுணையாக இருக்கின்றனர். நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் துணையும் இருப்பதால், பிரதீப் இன்னும் நிறைய சாதனைகளை படைப்பார் என எதிர்பார்க்கலாம்.