அடுக்குமாடி வீடு சரிந்து விழும் அதிர்ச்சி வீடியோ - வில்சன் கார்டன்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13187711-thumbnail-3x2-bangalore-house-collapse.jpg)
பெங்களூரில் உள்ள வில்சன் கார்டன் பகுதியில் மூன்று அடுக்குமாடி வீடு காலை 11 மணியளவில் சரிந்து விழுந்தது. 1962ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டடம் மோசமான நிலையில் இருந்ததால், அதில் வசித்தவர்கள் வீடுகளை காலி செய்துள்ளனர். இன்று வீட்டில் இருந்து மண் துகள்கள் கீழே விழுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் அங்கு வருவதற்குள் வீடு சரிந்து விழுந்து தரைமட்டமானது. சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Last Updated : Sep 27, 2021, 5:19 PM IST