’என் ரசிகர்கள் யாரும் ’ப்ளூ சட்டை’ மாறனிற்கு செருப்பு மாலை போடவில்லை..!’ - பார்த்திபன் - இரவின் நிழல்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15870463-thumbnail-3x2-maaran.jpg)
இயக்குநர் பார்த்திபன் நடித்து இயக்கி சமீபத்தில் வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், அந்தத் திரைப்படத்தை ’ப்ளூ சட்டை’ மாறன் கடுமையாக விமர்சித்தார். இந்தப் படம் உலகின் முதல் நான் லீனியர் திரைப்படமல்ல என்றும் பார்த்திபனை கடுமையாக சாடினார். இதனையடுத்து பார்த்திபனின் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனின் கொடும்பாவிக்கு செருப்பணிந்து அவமரியாதை செய்தனர். இந்நிலையில், அந்த சம்பவத்திற்கு தன் சார்பில் மன்னிப்பு கேட்பதாக தன்னிலை விளக்கமளிக்கும் பாணியில் ஆடியோ ஒன்றை பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST