மகன் கண் முன்னே விபத்தில் உயிரிழந்த தாய் - நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி - accident
🎬 Watch Now: Feature Video

மதுரை: வாடிப்பட்டி அருகே உள்ள மேட்டு நீரேத்தான் பகுதியை சேர்ந்தவர் பிச்சியம்மாள் (65). இவர் தனது மகன் கார்த்திக் உடன் இருசக்கர வாகனத்தில் வாடிப்பட்டி நோக்கி சென்றபோது, மதுரையில் இருந்து தேனி சென்ற அரசு பேருந்தின் பக்கவாட்டில் விழுந்ததில் பிச்சியம்மாள் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே பிச்சியம்மாள் உயிரிழந்தார். இதனை கண்ட மகன் கார்த்திக் தாயின் உடலை பார்த்து கதறி அழுதது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதன் பரபரப்பு காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, அதனடிப்படையில் வாடிப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST