வீடியோ: விடாமல் துரத்திய காட்டுயானை... 8 கி.மீ. ரிவர்ஸில் சென்ற பேருந்து... - கேரளாவில் காட்டுயானை அட்டகாசம்
🎬 Watch Now: Feature Video

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள சாலக்குடி-வால்பாறை மலைப்பாதையில் அரசுப்பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது காட்டுயானை ஒன்று குறுக்கிட்டு பேருந்தை வழிமறித்துள்ளது. இதனால் ஓட்டுநர் பேருந்தை ரிவர்ஸ் எடுத்துள்ளார். அதன்பின் யானை முன்னே சென்ற உடன் மீண்டும் முன்னே செலுத்தியுள்ளார். அப்போது அந்த யானை பேருந்து முன்னே வருவதை கண்டு மீண்டும் துரத்தியுள்ளது. இப்படி யானை துரத்த துரத்த ஓட்டுநர் பின்னே செலுத்தி 8 கி.மீ. தூரம் ரிவர்ஸிலேயே ஓட்டிச்சென்றுள்ளார். இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST