திண்டுக்கல் அருகே 3 மணிநேரம் போராடி வழுக்குமரத்தில் ஏறிய நபர் - Thousands of people participated
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் அடுத்து சாணார்பட்டி அருகே ராகலாபுரம் என்னும் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக 60 அடி உயரம் உள்ள கழுமரம் வெட்டிவிடப்பட்டு அதன் பட்டைகள் உடைக்கப்பட்டு வழுக்கும் பொருள்களான எண்ணெய் வகைகள் தடவப்பட்டு கழுமரம் கோயில் மைதானத்தில் ஊன்றப்பட்டது. இளைஞர்கள் ஒன்றன்பின் ஒருவராகப்போட்டி போட்டுக்கொண்டு கழுமரத்தில் ஏற முற்பட்டனர். சுமார் 3 மணி நேரப்போராட்டத்திற்குப்பின்பு ராகலாபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கழு மரத்தின் உச்சியில் ஏறி அங்கு வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்களை அவிழ்த்தார். இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST