video:பார்ப்பதற்கு தத்ரூபமாக காட்சி தரும் கோலங்கள் - ஆர்டிஸ்ட் என நிரூபிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை - Gandharvakota history teacher Anandi
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை: அருகே உள்ள கந்தர்வகோட்டை பகுதியில் தஞ்சை சாலையில் குடியிருப்பவர், ஆனந்தி. இவர் கந்தர்வகோட்டையில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது திறமைகளை காட்டும் வகையில் தினந்தோறும் அவரது வீட்டின் வாசலில் பல்வேறு வண்ணங்களில் தொடர்ச்சியாக கோலம் போட்டு அசத்தி வருகிறார். இதனைக் கண்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரலாறு ஆசிரியை ஆனந்தியைப் பாராட்டி வருகின்றனர். மேலும் தற்பொழுது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகாலையில் இருந்து அதிக ஆர்வத்துடன் அவரது வீட்டின் வாசலில் கோலங்களை போட்டு சாலையில் செல்பவர்களின் கண்களை கவர்ந்து வருகின்றார். அதை சிலர் சமூக வலைதளங்களில் பரப்ப, இவரது கோலங்கள் பல்வேறு தளங்களில் வைரல் ஆகி வருகிறது.