டெல்லி: அளவுக்கு மீறி நொறுக்குத் தீணிகளையும், ‘ஃபாஸ்ட் புட்’ எனச் சொல்லப்படும் உணவுகளையும் உட்கொள்ளும் பழக்கம் தற்போது பெருகி வருகிறது. எந்த காரணம் சொல்லியும் அதை பாராட்டவோ, நியாயப்படுத்தவோ யாராலும் முடியாது.
ஆனால் நம் மனம் ஏன் இத்தகைய உணவுகளைத் தேடிச் செல்கிறது..? நாம் தினம்தோறும் இத்தகைய உணவுகளால் உடலுக்கு ஏற்படும் தீமைகளைப் பற்றி படித்து வருகிறோம். இந்தப் பழக்கம், மாரடைப்பு, உடல் பருமன், அதிக ரத்தக் கொதிப்பு, இதய நோய் போன்ற எண்ணற்ற நோய்களால் நம் உடல் பாதிப்படையலாம். ஆனால் நம்மில் பலரால் அதை உட்கொள்ளுவதை நிறுத்த முடிவதில்லை.
இதுகுறித்து, பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்தேறியுள்ளது. இதுகுறித்து பிரபல உணவியல் நிபுணர்களான காஜல் & புஷ்ரா கூறுகையில், “ நம்மில் பல பேர் சத்துள்ள உணவுகள் ருசியாக இருக்காது என எண்ணிவிடுகிறோம்.
யாரும் காய்கறிகளையோ, பழங்களையோ உண்ண விரும்புவதில்லை. இந்த வெறுப்பு நமக்கு சிறுவயதிலிருந்தே பழக்கமாகிறது. ஆனால், ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், நீங்கள் இனியும் ஐந்து வயது குழந்தை அல்ல.
ஆகையால் அந்த சிருவயது பழக்கத்தைக் கைவிட வேண்டும். நமது நாவின் சுவை அரும்புகள் ஒவ்வொரு 5 - 6 வருடங்களுக்கு ஒருமுறை மாறும். அதே போல் ஒரு புதிய சுவைக்கு பழக்கப்பட 10 -12 முறைகள் அதை சுவைத்துப் பார்த்தால் தான் அந்த பழக்கம் ஏற்படும். ஆம், நொறுக்குத் தீணிகள் மிகுந்த சுவையான உணவுகள் தான். ஆனால் சத்துள்ள உணவுகளை சுவைமிக்க உணவுகளாகவும் செய்ய முடியும்.
பலபேர் தூங்குவதை பலவீனமான செயலாகக் காண்கிறார்கள். அதிகப்படியான தூக்கமின்மையும் நம்மை சத்தற்ற உணவுகளைத் தேடிச் செல்லவைக்குமென ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. சமீபத்திய ஆய்வில், ஒரு நாளைக்கு 9 மணிநேரம் தூங்குபவர்களை விட 4 மணிநேரம் தூங்குபவர்கள் ஐஸ்கிரீம், பீட்சா போன்ற படங்களைக் கண்டதும் ஈர்க்கப்படுகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.
தூக்கபின்மை நம் உடலின் அனைத்து செயலமைப்பையும் பாதிக்கும். நம்மை ஓர் சுகவாசத்தைத் தேடிச் செல்ல வைக்கும். அது ஒரு கட்டி அணைப்பிற்காக ஏங்குதலோ அல்லது நொறுக்குத் தீணியைத் தேடிச் செல்லுதலோ.
நமக்கு மன அழுத்தமான சூழல்களில் நமது உடல் ‘கார்டிசால்’ எனும் ஹார்மோனை வெளியிடும். கொலுப்புகளும், சக்கரையும் ஒருவரை நன்றாக உணரவைக்குமென விஞ்ஞான ஆராய்ச்சிகள் சொல்கிறது. ஆகையால், அந்த மாதிரியான சூழல்களில் நம் மனம் தானாகவே இதுபோன்ற திண்பண்டங்களைத் தேதிச் செல்லும். நம்மில் வயதில் மூப்பவர்கள் நம்மை உணவை 32 முறை மென்னு உட்கொள்ள வேண்டுமென சொல்லக் கேட்டிருப்போம்.
ஆனால் தற்போதைய சூழலில் அனைவரும் உணவு உண்ண வெறும் 5 -10 நிமிடங்கள் தான் செலவிடுகின்றனர். நம் வாழ்வுமுறையும் அப்படி நம்மளைத் தள்ளிவிட்டது. அதை இனியாவது நாம் மாற்ற முயற்சி செய்ய வேண்டும். வேகமாக சாப்பிடுவது நம் மூளைக்கு செல்லும் தகவல்களைத் துண்டித்து நம்மை அதிகமாக உட்கொள்ளும் படி செய்துவிடும்.
பெண்களின் மாதவிடாய் காலகட்டங்களிலும், கர்ப்பமுற்ற காலக்கட்டங்களிலும் அவர்களின் உடலிலுள்ள ஹார்மோன்ஸ் ஓர் சிறிய போராட்டமே நடத்தும். லெப்டின் மற்றும் செரோடின் போன்ற ஹார்மோன்கள் நம் மூளைக்கும், வயிற்றுக்கும் இடையே உள்ள சீறைக் குளைத்து கண்ட நேரங்களில் உணவைத் தேடிச் செல்ல வைக்கும்.
பலமுறை வரும் தாகங்கள் கூட பசி என தப்பான தகவலை நம் மூளை நம்மிடம் சொல்ல நேரிடும். நாம் போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருந்தாலோ, புரதச் சத்து குறைபாடு இருந்தாலோ நம்மை இது போன்ற நொறுக்குத் தீணிகளுக்குக் கொண்டு செல்ல வைக்கும்.
ஊட்டச் சத்துக் குறைபாடுகளும் இத்தகைய உணவுகளை நோக்கி நம்மை நகர்த்தும். குறிப்பாக மெக்னிசியம் குறைபாடு, நம்மை சாக்லெட், கடலைகள் போன்றவைகளை நோக்கிச் செல்ல வைக்கும். மேலும், ஒருவர் நொறுக்குத் தீணி உண்டாலோ, அல்லது அதைப் பற்றி பேசினாலோ நமக்கும் அதை சப்பிடத் தோன்றுவதும் இயல்பானதே.