ETV Bharat / sukhibhava

அமெரிக்காவில் "ஜாம்பி" போல் நடந்து கொள்ளும் மக்கள்.. புதிய மாற்று மருந்தால் வெடித்த பயங்கரம்.. - அமெரிக்காவில் போதைப்பொருள்கள்

அமெரிக்காவில் போதைப்பொருளை கட்டுப்படுத்த விற்பனை செய்யப்படும் Xylazine என்னும் மருந்தால் மக்கள் ஜாம்பி போல நடந்துகொள்கிறார்கள். இந்த மருந்தால் தோல் அழுகுவதால் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Xylazine
Xylazine
author img

By

Published : Feb 24, 2023, 9:28 PM IST

நியூயார்க்: அமெரிக்காவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகளவில் இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள் மீட்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர். இவர்களிடையே போதைப்பொருள் நாட்டத்தை கட்டுப்படுத்த மாற்று மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட Xylazine என்னும் மாற்று மருந்து ஹெராயின் பயன்படுத்துவோருக்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மருத்து கால்நடை மருத்துவ பயன்பாட்டிற்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை தொடர்ந்து பயன்படுத்தியவர்களில் பலர் ஜாம்பி போல நடந்துகொள்வதாக புகார்கள் எழுந்த நிலையில், அதை பயன்படுத்திய பலருக்கு தோல் அழுகத் தொடங்கி உள்ளது. இதனிடையே Xylazine மருந்தை தொடர்ந்து எடுத்துக்கொண்டவர்கள் ஜாம்பி போல நடந்துகொள்ளும் வீடியோக்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மருந்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், தூக்கமின்மை, சுவாச பாதிப்பு, மன அழுத்தம், தோல்களில் கடுமையான காயங்கள் ஏற்படும் என்றும் உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், தோலின் செல்கள் அழிந்துபோகும் காயங்கள் குணமடையாது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து நியூயார்க்கை சேர்ந்த 28 வயதான சாம் கூறுகையில், "நான் பல ஆண்டுகளாக போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தேன். கடந்த 9 மாதங்களாக Xylazine மருந்தை பயன்படுத்தி வருகிறேன். ஆரம்பத்தில் எனக்கு எந்த காயங்களும் இல்லை. ஆனால், இப்போது கால்களில் துளைகள் ஏற்பட்டுவருகின்றன. அவ்வப்போது சுயநினைவை இழக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருமண சீசனில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க 7 டிப்ஸ்.. கடைசி டிப்ஸ மறந்துராதீங்க..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.