ETV Bharat / sukhibhava

Walking Benefits in tamil: நலம் தரும் நடைப்பயிற்சி; இவ்வளவு நன்மைகளா? - life style

Walking Benefits in Tamil: மாறி வரும் காலகட்டத்தில் அனைவரும் தங்கள் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்ய, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது அவசியமாகிவிட்டது. நடைப்பயிற்சியால் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது குறித்துப் பார்க்கலாம்.

Walking Benefits in Tamil
Walking Benefits in Tamil
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 6:05 PM IST

சென்னை: மனிதர்களுக்கு உடல் உழைப்பு குறைந்து, இயந்திரமயமாகி நோய்களின் தாக்கம் அதிகமாகிவிட்டது. இதனால் உடல் வலுவிழந்து, நோய்த் தொற்றுகளும் ஏற்படுகின்றன. இதைச் சரி செய்ய நடைப்பயிற்சி மேற்கொள்வதே சிறந்த வழி எனக்கூறும் மருத்துவர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் பொதுவாக அனைவருமே கட்டாயமாக நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாகக் காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: Spices For Weight Loss Tips In Tamil: அஞ்சறைப் பெட்டிக்குள் இப்படி ஒரு ரகசியமா? இது தெரியாம போச்சே.!

நோய்கள் வருவதைத் தடுக்கிறது: காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் புத்துணர்ச்சி கிடைக்கும். இதனால் நாள் முழுவதும் சோம்பலின்றி இருக்கலாம். இதய நோய், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளையும் தடுக்கிறது. உடல் எடையைச் சம நிலைக்குக் கொண்டு வருகிறது. மேலும் மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது.

மன அழுத்தம் குறையும்: காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது, எண்டோர்பின்கள் வெளியாகின்றன. இதனால் நமது மனநிலை மேம்பட்டு, மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்றவற்றைச் சரி செய்கிறது. காலையில் கிடைக்கும் சுத்தமான காற்றைச் சுவாசிப்பது, மனதிற்கு இதமளிக்கும். இதனால் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

இதையும் படிங்க: Breakfast Salads in Tamil: சுறுசுறுப்பான நாளை பெற வேண்டுமா: காலை உணவில் சாலட் எடுத்துக்கொள்ளுங்கள்.!

எலும்பை வலுவாக்கும்: காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது, சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய விட்டமின் D உடலுக்குக் கிடைக்கும். இதனால், எலும்புகள் வலிமையடைந்து, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதைத் தடுப்பது மட்டும் இன்றி கால்சியம் மேம்படுவதால் எலும்புகள் வலிமை பெறும்.

இதயத்தைப் பலப்படுத்தும்: உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதய நோய்கள், பக்க வாதம் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம். கொலஸ்ட்ராலை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

உடல் எடையைக் குறைக்க உதவும்: உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நடைப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நடைப்பயிற்சியால் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் கரையும். இதனால் எளிதில் உடல் எடையைக் குறைக்கலாம்.

நினைவாற்றல் அதிகரிக்கும்: நடைப்பயிற்சி மேற்கொள்வது தூக்கத்தை மேம்படுத்துகிறது. காலை நடைப்பயிற்சி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது நினைவாற்றல் அதிகரிக்க உதவுகிறது. நடைப்பயிற்சியால் உடல் தசைகள் வலுவாகும்.

மொத்தத்தில் காலை நேரத்தில் நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஒட்டு மொத்த வாழ்வின் ஆரோக்கியமும் உறுதி செய்யப்படும். நலமுடனும் வாழலாம்.

இதையும் படிங்க: Indoor Plants Benefits In Tamil: வீட்டிற்குள் செடி வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா? அடுத்த தலைமுறைக்கும் ஆரோக்கியமான வாழ்வு.!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.