ETV Bharat / sukhibhava

டாட்டூ போடப்போகிறீர்களா? - இதை கவனிக்கவும்

author img

By

Published : Jan 19, 2022, 7:54 PM IST

வருடா வருடம் மாறும் ஃபேஷன் ட்ரெண்டுகளைப் போல டாட்டு ட்ரெண்டுகளும் மாறக் கூடியதவைதாம். 2022இல் இன்னும் பல புதிய ட்ரெண்டுகள் வர காத்திருக்கின்றன. அதற்கு முன்னர் நீங்கள் டாட்டு போடும் எண்ணத்துடன் இருந்தால் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய டிப்ஸ் இதோ...

டாட்டூ போடப்போகிறீர்களா..? : இதை கவனிக்கவும்

‘டாட்டூஸ் ஆஃப் லைட்னிங்’ இந்த டாட்டூ டிசைன் சக்தி, பலம், அறிவு போன்றவற்றைக் குறிக்கும். இது கிரேக்க புராணங்களைச் சார்ந்தது. இந்த டிசைன் 2022இல் நிச்சயம் முக்கிய டாட்டூ ட்ரெண்டாக இருக்கும்.

வானவில் வண்ணத்தில் பிரபலமாகிவரும் டாட்டூ டிசைன்தான் ‘ஹோலோகிராம் டாட்டூஸ்’. இந்த வகையான டாட்டூஸ் ஒளிக்கு ஏற்றவாரு நிறம் மாறக்கூடியவையாகும். பளிச்சிடும் நிறங்களைக் கொண்ட டாட்டூக்களும் சிறிய வடிவங்கள் கொண்ட டாட்டூக்களுமே இந்தியாவில் ட்ரெண்டில் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

குறைந்தபட்ச டிசைனில் உள்ள டாட்டூக்களே 2022இல் பிரபலமாக இருக்கும். ஒருவர் தனக்கான டாட்டூ டிசைனை தேர்வு செய்யும்போது, அவர்களுக்கு அது ஏற்றவாறு உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையைக் குறிக்கும்விதமாக அல்லது அதைச் சார்ந்த டாட்டூவின் டிசைனைத் தேர்வுசெய்ய வேண்டும்.

டாட்டூ தொழில் துறை மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு தொழில் துறையாகும். இனி வருடா வருடம் புதிய ட்ரெண்டுகளும் டிசைன்களும் அறிமுகமான வண்ணமே இருக்கும். டாட்டூ போடும் முன்னர், முன்னெச்சரிக்கையாகச் செய்ய வேண்டிய சில வழிமுறைகளைப் பற்றி மருத்துவர் வித்யுசி ஜெயின் கூறுகையில்,

டாட்டூ போடுவதற்கு முன்

  • டாட்டூ போடுவதற்கு முந்தைய இரவில் ’கஃபெய்ன்’ (Caffeine) கலந்திருக்கும் எதையோ அல்லது மதுவோ அருந்தக் கூடாது. ஏனெனில், அது டாட்டூ போடும்போது ரத்த காயங்களை ஏற்படுத்த நேரிடும்.
  • ஒரு வாரத்திற்கு முன்பாவது நிறைய நீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் நீராவது குடிப்பது உங்களின் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
  • டாட்டூ போடும்போது, உங்களுக்கு டாட்டூ போடும் நபர் புதிய ஊசிகளைத் தான் பயன்படுத்துகிறாரா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களின் உடலைப் பல்வேறு வைரல் நோய்கள் தாக்க நேரிடும்.

டாட்டூ போட்டதற்குப் பின்

  • டாட்டூக்கள் மூலம் தோல் வியாதிகள் மிக எளிதாகப் பரவக் கூடும். ஆகையால் டாட்டூ போட்ட இடத்தை முறையான பேண்டேஜ்களைப் பயன்படுத்திக் காப்பது முக்கியம்.
  • டாட்டூ போட்ட இடத்தைக் கழுவும் முன், கைகளை சோப் வைத்து சுத்தமாகக் கழுவ வேண்டும்.
  • டாட்டூ போட்ட பின்பு இரண்டு வாரத்திற்காவது அந்த இடத்தை சுடு நீரிலோ, நீச்சல் குளத்திலோ படாமல் வைக்க வேண்டும்.
  • நீங்கள் டாட்டூ போட்ட இடத்தை சூரிய வெளிச்சம் நிறைய படாமல் சில நாள்களுக்கு பார்த்துக் கொள்வது நல்லது.
  • உங்கள் டாட்டூவில் சன் ஸ்கிரீன், லோசன் போன்றவற்றைப் பயன்படுத்திப் பராமரிக்க வேண்டும்.

இதையும் படிங்க: குளிர் காலத்தில் சருமம் ஜொலிக்க வேண்டுமா...? இது மட்டும் போதும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.