ETV Bharat / sukhibhava

கண் வலியில் இருந்து தற்காத்து கொள்ள மருத்துவர்களின் 10 சிம்பிள் டிப்ஸ்! - Ten ways to prevent Eye flu

EYE FLU Prevention: கண் வலியில் இருந்து பொது மக்கள் தங்களை தாங்களே தற்காத்து கொள்ள மருத்துவர்கள் எளிதான 10 குறிப்புகளை வழங்கியுள்ளனர்.

Ten ways to prevent Eye flu, also known as Conjunctivitis
கண் வலியில் இருந்து தற்காத்து கொள்ள சிம்பிள் டிப்ஸ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 5:31 PM IST

ஹைதராபாத்: இன்றைய காலகட்டங்களில் பொது மக்கள் பாதிக்கப்படும் நோய்களில் கண் வலியும் வரிசையில் சேர்ந்துள்ளது. பொதுவாக இதன் காரணங்களை ஆராயும் போது, குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் வெகுநேரத்திற்கு கதிரொளிகள் எதிர் வரும் மொபைல் ஃபோன், கம்ப்புயூட்டர்களை பார்ப்பதினாலே பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இது ஒருபுறம் இருக்க கால மாற்றத்தினால் பருவ நோய்களில் கண் வலி ஏற்படுகின்றது என்றும் தெரிவித்து உள்ளனர். தொலைநுட்பங்களைக் கடந்து, வைரஸ் தொற்றினால் பலரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

கால மாற்றத்தின் போது, பொதுவாக குழந்தைகள் அதிகளவில் பருவ நோயின் தாக்கத்தில் பாதிக்கப்படுவர். இதன் வரிசையில் தற்போது கண் வலி, தொற்று நோய்களில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கண் வலி அல்லது வைரஸ் கன்ஜக்டிவிடிஸ் என பெயரிடப்பட்ட இந்த தொற்றுக்கு இதுவரையில் குழந்தைகள், முதியவர்கள் என பல தரப்பு வயதினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் கன்ஜக்டிவிடிஸ் என அறியப்படும் இந்த வகை வைரஸ் தொற்று, மனித கண்களில் இருக்கும் மேல் தசையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

இதனால் கண்களில் எரிச்சல், சிவப்பு நிறத்தில் தென்படுதல், கண்களில் நீர் சொட்டுதல் போன்ற பல பிரச்சினைகளை உண்டாக்கின்றது. வைரஸால் ஏற்படும் கண் வலி, தொற்று நோய் என்பதனால் எளிதில் பரவக்கூடியதாக உள்ளது. இதனால் பொது மக்களுக்கு கடும் சவலாக உள்ளது. இந்த சிரமத்தை முறிக்கவே பொதுமக்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கண் வலியில் இருந்து தங்களை தாங்களே தற்காத்து கொள்ள 10 புதிய வழிமுறைகளை வலியுறுத்தியு உள்ளனர்.

1. கைகளை சுத்தமாக வைத்தல்: கண் வலியால் பாதிக்கப்பட்டோர் அவரது கைகளை சோப்(வழலை) மூலம் அடிக்கடி கைகழுவ வேண்டும். அவ்வாறு கைகழுவுவதன் மூலம், கைகளில் படிந்திருக்கும் அழுக்குகள், பேக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை நீக்கும்.

2. பாதிக்கப்பட்ட கண்களை தொடுதல் கூடாது. அடிக்கடி கண்களை தொடும் போது, அதீத எரிச்சல் மற்றும் கைகளில் படிந்திருக்கும் நுண்ணுயிரிகளால் கூடுதல் பாதிப்பு ஏற்பட வாய்புள்ளது.

3. SHARING UTENSILS: டவல், ஒப்பனைப் பொருட்கள், காண்டகட் லென்ஸ், கண் மருந்து போன்ற பாதிக்கப்பட்டோரின் உடமைகளை பிறர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் பிறருக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

4. கண் வலியால் பாதிக்கப்பட்ட நபர்கள் அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் அல்லது பொது இடங்களில் சுத்தமாகவும் பிறரை தீண்டாத வகையில் சுதகாரத் தன்மையுடன் நடந்து கொள்தல் வேண்டும்.

5. கண் வலி தொற்று நோய் என்பதால், பாதிக்கப்பட்டோர் பொது இடங்களில் கண்ணாடிகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. இது சூரிய ஒலியில் இருந்து காப்பாற்றவும், எரிச்சலை கட்டுபடுத்தவும் உதவும்.

6. பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் சோப்பைக் கடந்து, 60% சதவீததிற்கு சானிடைசர்களை கொண்டு தொற்றில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

7. தொற்றினால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் பொது இடங்கள், மக்கள் நிறைந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

8. பொது இடங்களை தவிர்த்து, பொதுவாகவே பாதிக்கப்பட்ட நபர் தங்கள் வீட்டிலும் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.

9. கண் வலியால் பாதிக்கப்பட்ட நபர், தும்மல், இருமல் போன்ற நேரங்களில் துணிகள் அல்லது தங்கள் கைகளை வைத்து மறைத்து செய்தல் வேண்டும். இதனால் நேரடி பாதிப்புகளை தவிர்க்க முடியும்.

10. நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள், மருத்துவர்கள் அனுமதியின்றி எந்த மருந்தையும் பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களில் தங்களை தங்களே தற்காத்து கொள்ள வேண்டும். சுற்று புறத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்து கொள்ள வேண்டும்.

கண் வலி எளிதாக காணப்பட்டாலும், உடலில் பல்வேறு மூலப்பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. அதனால் உரிய சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

இதையும் படிங்க: கண்களில் வறட்சியா? இதுதான் காரணம்!.. மருத்துவரின் அறிவுரையை கேளுங்கள்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.