ETV Bharat / sukhibhava

மன அழுத்தத்தைப் போக்க உதவும் ஆயுர்வேத மருத்துவம்! - சிந்தனைத் தடுமாற்றம்

”நேர்மறை மன அழுத்தம் உடல் மற்றும் மனம் சார்ந்த செயல்பாடுகளை அதிகரித்து, நமது இலக்கை நோக்கி நம்மைத் தள்ளும். அதே வேளையில், எதிர்மறை மன அழுத்தம் நம் அன்றாட செயல்பாடுகளை முற்றிலும் பாதித்து, தலைகீழ் விளைவுகளை ஏற்படுத்தும்”.

மன அழுத்தம்
மன அழுத்தம்
author img

By

Published : Sep 14, 2020, 11:00 PM IST

மன அழுத்தம் என்பது மனித வாழ்வில் தவிர்க்க இயலாதது. அனைவரும் தங்களது வாழ்வில் ஒருமுறையேனும் மன அழுத்தத்தைக் கடக்கிறார்கள், எதிர்கொள்கிறார்கள். ஆனால், நீண்ட நாள்களுக்குத் தொடரும் மன அழுத்தமானது நம் மனதை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

எனவே, நீண்ட நாள் மன அழுத்தத்தை எதிர்கொள்வது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியது, அத்தியாவசியமான ஒன்று. இது குறித்து ஹைதராபாத்தின் ஏ.எம்.டி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ராஜ்யலட்சுமி மாதவம் கூறுகையில், “நீண்ட நாள் மன அழுத்தம் நம் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை அதிகரிக்கிறது. இது மிகுந்த தீங்கு விளைவிக்கவல்லது. மன அழுத்தத்தை நேர்மறை மன அழுத்தம், எதிர்மறை மன அழுத்தம் என இருவகையாகப் பிரிக்கலாம்.

நேர்மறை மன அழுத்தம் உடல் மற்றும் மனம் சார்ந்த செயல்பாடுகளை அதிகரித்து, நமது இலக்கை நோக்கி நம்மைத் தள்ளும். அதே வேளையில், எதிர்மறை மன அழுத்தம் நம் அன்றாட செயல்பாடுகளை முற்றிலும் பாதித்து, தலைகீழ் விளைவுகளை ஏற்படுத்தும்.

மன அழுத்தம்,

  • தலைவலி
  • கவலை
  • சிந்தனைத் தடுமாற்றம், விரக்தி
  • உயர் ரத்த அழுத்தம்
  • இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை
  • வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்தார்.

மேலும், இவற்றைத் தவிர்த்து, மன அழுத்தத்தைக் குறைத்து உதவக்கூடிய சில ஆயுர்வேத மூலிகைகளையும் டாக்டர் ராஜ்யலட்சுமி நம்மிடம் தெரிவித்தார்.

அஷ்வகந்தா :

கார்டிசோல் அல்லது ரத்தத்தில் உள்ள மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் அளவைக் குறைக்க அஸ்வகந்தா உதவுகிறது.

ப்ராமி :

மன அழுத்தத்தைக் குறைத்து இலகுவாக்கி, நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கக் கூடிய ’செரட்டோனின்’ எனும் ஹார்மோனை அதிகரிக்க இந்த மூலிகை உதவுகிறது.

துளசி அல்லது பேசில் :

வழிபாடு தொடங்கி பல நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படும் இந்த மூலிகை, ஆன்ட்டிஆக்சிடன்ட்ஸை அதிகரிக்க வல்லது. மேலும் மன அழுத்தம் ஏற்படும்போது உடலில் அதிகரிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடுவதிலும் துளசி சிறப்பாகப் பங்காற்றுகிறது.

வச்சா:

கார்டிசாலைக் குறைத்து, மூளையின் செயல்பாடுகளை சமநிலைப்படுத்த உதவுகிறது.

ஜடமன்சி :

மன அழுத்தத்தைக் குறைத்து தூக்கத்தை வரவழைக்கவல்லது.

மேற்கண்ட மூலிகைகள் தவிர்த்து, வேறு சில பொதுவான அறிவுறுத்தல்களை மருத்துவர் வழங்கியுள்ளார். அவை,

  • நிச்சயம் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். தங்களது உணவில், உலர்ந்த பழங்கள், க்ரீன் டீ, பாதாம் போன்ற ஆண்டிஆக்சிடண்ட்ஸ் நிறைந்த உணவுப் பொருள்களை சேர்த்துக் கொள்ளலாம். மன அழுத்தத்தைக் குறைப்பதில் சிகப்பரிசி உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நாள்தோறும் யோகாசனம், தியானம், மூச்சுப்பயிற்சி செய்து வரலாம்.
  • சரியாகத் தூங்கி முழிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
  • மது அருந்துதல், புகைப்பழக்கம், காபி அருந்துதல் உள்ளிட்ட பழக்கங்களைத் தவிர்க்கலாம்.
  • இசை, சவுண்ட் தெரபி ஆகியவையும் மன அழுத்தத்தைக் குறைப்பதில் பெரும் பாங்காற்றவல்லது.

பொதுவாக ஆயுர்வேதத்தில்,

  • ஷிரோதரா (நெற்றியில் ஆயுர்வேத எண்ணெயை ஊற்றி சிகிச்சை அளிப்பது)
  • ஷிரோபஸ்டி (நெற்றியில் ஆயுர்வேத எண்ணெயை ஊற்றி, அதை அங்கேயே சிறிது நேரம் படரவிட்டு சிகிச்சை அளிப்பது) என இரு சிகிச்சை முறைகள் உள்ளன.

மேற்குறிப்பிட்ட இந்த மூலிகைகளையும், மருத்துவ முறைகளையும் சரியான வழிக்காட்டுதல்களின்படி, மருத்துவர்களின் கண்காணிப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், சரிவிகித உணவு முறையையும் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தால் மன அழுத்தம் நம்மை அவ்வளவு சீக்கிரத்தில் அண்டாது.

இதையும் படிங்க : சமூகவயப்படுதலே தற்கொலைக்கான ஒரே தீர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.