ETV Bharat / sukhibhava

இதுதான் தீராத முதுகுவலிக்கு காரணம்... உண்மையை உடைத்த பிசியோதெரபிஸ்ட்! - யோகா கலந்தாய்வு

இன்றைய தலைமுறையினரின் தீராத பிரச்சினையான முதுகுவலிக்கு, மன அழுத்தம் தான் காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அவற்றை யோகா மூலம் சரிசெய்ய முடியும் என பிசியோதெரபிஸ்டும்,யோகா ஆசிரியருமான டாக்டர் ஜான்வி கத்ரானி தெரிவிக்கிறார்.

backpain
முதுகுவலி
author img

By

Published : Mar 3, 2021, 7:14 AM IST

இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் மிகப்பெரிய பிரச்சினையாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது. பள்ளி பருவத்தில் பாடம் புரியவில்லை என்பதால் தொடங்கும் மன அழுத்தம், வேலைக்கு சேர்ந்ததும் இரண்டு மடங்கு ஆகிறது. குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடிக்கவேண்டும் என்ற கண்டிஷனில் பணியாற்றுகையில், மன அழுத்தம் கூடுதல் ஆகிறது. அதிக மன அழுத்தமானது ஒருவருக்கு மன ரீதியாக மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தாது. உடல் ரீதியாகவும் பிரச்சினையை ஏற்படுத்தும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

அதிக மன அழுத்தம் முதுகு வலியைத் தூண்டுகிறது. மக்கள் பலர் தீராத முதுகு வலி பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். இதன் பின்னணியில் மன அழுத்தம் தான் இருக்கிறது. இதனைச் சரிசெய்திட யோகா பயிற்சி சரியான தீர்வு என நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்து கூடுதல் தகவல்களுக்காக பிசியோதெரபிஸ்டும், யோகா ஆசிரியருமான டாக்டர் ஜான்வி கத்ரானியை அணுகினோம்.

backpain
யோகா மூலம் முதுகுவலியைத் தீர்க்கலாம்

யோகா மூலம் முதுகுவலியைத் தீர்க்கும் வழிகள்:

யோகா கலந்தாய்வு: ஆலோசனை பெறுவதன் மூலம் மன அழுத்தம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சிக்கல்களைத் தீர்க்க முடியும் எனக் கூறப்படுகிறது.

கிளின்ஸிங் பிராசஸ்(Cleansing processes): கபல்பதி (நுரையீரலின் கீழ்ப் பகுதியைச் சுத்தம் செய்தல்), ஜலா நேட்டி (நாசி பாதையை உப்பு நீரில் சுத்தம் செய்தல்), வாமன் தவுஹாத்தி (நுரையீரலைச் சுத்தம் செய்வது, குறிப்பாக வயிற்றின் அமிலத்தை நீக்குதல்), ஷாங்க் பிரக்ஷலானா (குடல்கள் மற்றும் நச்சுக்களை சுத்தம் செய்தல்) என நான்கு வகையான கிளினிங் வழிகள் உள்ளன.

பிராணயாமா (Pranayama): உடலில் மறைமுகமாக ஓடி கொண்டிருக்கும் பாசிட்டிவ் எனர்ஜிகளை ஒன்றுசேர்க்கும் முயற்சி ஆகும். இந்த முறையால் மன அழுத்த பிரச்சினையை வென்றிட முடியும்.

யோகாசனம்: முதுகு தசைகள் உடல் வலிமையை அதிகரிக்கின்றன. தசைநார்கள் பயனுள்ளதாக அமைகிறது. பல வகையான யோகாசனங்களில், பல்வேறு நன்மைகள் இடம்பெற்றுள்ளன.

தியானம்: முதுகெலும்புப் பகுதிகள் தொடர்பான எந்தவொரு வலியையும் சரிசெய்வதற்குத் தியானம் சிறந்த வழி ஆகும். தியானம் செய்கையில், சிந்தனைகள் மாறுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

fitness
தியானம்

யோகா தொடர்பான ஆலோசனைகளுக்கு, சிறந்த யோகா தெரபிஸ்ட்டை சந்திப்பதும் அவசியமாகும். இது குறித்து கூடுதல் சந்தேகங்களுக்கு jk.swasthya108@gmail.com என்ற மின்னஞ்சலில் மருத்துவர் ஜான்வியை தொடர்புக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: உடல் எடையை பழங்கள் அதிகரிக்குமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.