வாஷிங்டன்: புகைபிடிப்பவர்களுடன் அருகில் வசிப்பவர்களுக்கு கேன்சர் வர அதிக வாய்ப்புள்ளதாக ஓர் ஆய்வினை வெளியிட்ட லான்செட் பத்திரிகையில், சிகரெட் பிடிப்பவர்களுக்கு அருகே வசிப்பது கேன்சர் வருவதற்கான காரணங்களில் 10ஆவது இடத்தை பிடித்துள்ளது.
2019ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வில், 34 நடவடிக்கைகள், வளர்சிதைமாற்றங்கள், சுற்றுச்சூழல்கள், வேலைகள் மூலமாக எப்படி 23 கேன்சர் வகைகளின் காரணத்தால் மனித இறப்பு மற்றும் நோய் பரவுகிறது என 2019ஆம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்டது.
தினசரி புகைப்பவர்களுடன் வசிப்பவர்கள் புகையிலையின் புகையை சுவாசிக்க நேரிடும் என வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அவர்களின் ஆய்வின் படி, புகை பிட்த்தல், மது அருந்துதல், உடல் பருமன் ஆகிய மூன்றும் கேன்சருக்கான மூன்று அபாய காரணங்களாகத் தெரிகிறது.
இவைகளுடன் சேர்த்து, பாதுகாப்பற்ற உடலுறவு, சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருப்பது, குறிப்பிட்ட காற்று மாசு முதலிய காரணங்கள் அபாய காரணங்களாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வுகளை கடந்த 2019ஆம் ஆண்டில் இறந்த 3.7 மில்லியன் நபர்கள் மற்றும் வாழ்நாள் காலம் முழுவதும் நோய்வாய்ப்புற்று இருந்த 87.8 மில்லியன் நபர்களை வைத்து இந்த ஆய்வினை ஆய்வாளர்கள் செய்துள்ளனர்.
சிகரெட், சிகார், குட்கா, அல்லது புகைப்பிடிக்கும் குழாய் என இவை எதிலும் புகைப்பவர்களுக்கு அருகே இருப்பவர்களுக்கு கேன்சர் வருவதற்கான அபாயம் அதிகம். மற்றவர் விடும் புகையை நாம் சுவாசித்தாலும், பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மத்தியில் நாம் அந்தப் புகையை சுவாசிக்க நேரிட்டாலும் இதற்கான அபாயங்கள் அதிகம்.