ETV Bharat / sukhibhava

400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒலி மூலமான தொடர்பு; ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவுகள் - முதுகெலும்பு உள்ள உயிரினங்கள்

உலகில் பல முதுகெலும்பு உள்ள உயிரினங்கள் ஒலி மூலமே தொடர்பு கொண்டு வருகின்றன. உதாரணமாகப் பறவைகள், தவளைகள் மற்றும் நாய்கள் போன்ற ஒவ்வொரு உயிரினங்களும் பிரத்தியேகமான சத்தங்கள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.

Etv Bharatஒலி  தொடர்பு
Etv Bharatஒலி தொடர்பு
author img

By

Published : Oct 26, 2022, 4:06 PM IST

சூரிச் [சுவிட்சர்லாந்து]: பிரபஞ்சத்தில் பூலோகம் தோன்றிய பின்னர் உருவான உயிரினங்கள் ஊர்வனவாகவும், நீந்துபவையாகவும் இருந்தன. அவையே காலப்போக்கில் முதுகெலும்பு உடைய உயிரினங்களாக மாறின.

இந்நிலையில் முதுகெலும்பு உள்ள உயிரினங்கள் அவைகளுக்கு இடையே தொடர்பு கொள்ள ஒலியைப் பயன்படுத்தத் தொடங்கின. மேலும் ஒலி மூலம் அதன் உணர்வுகளை மற்ற உயிரினங்களுக்குக் கடத்தின.

மனிதர்களாகிய நாமும் ஒலி மூலமே தொடர்பு கொண்டு வருகிறோம். இத்தகைய ஒலி மூலமான தொடர்பு 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே உருவானதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பெரும்பாலான முதுகெலும்பு உயிரினங்கள் தகவல் தொடர்பு கொள்ள ஒலி மூலமான (குரல்) தொடர்பு கொள்ளும் முறையையே பயன்படுத்துகின்றன.

உதாரணமாகப் பறவைகள், தவளைகள் மற்றும் நாய்கள் போன்ற ஒவ்வொரு உயிரினங்களும் பிரத்தியேகமான சத்தங்கள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.

இந்த வகையான உயிரினங்களின் வாழ்வில் அதன் குட்டிகளை வளர்ப்பது, இணையை ஈர்ப்பது மற்றும் பல நடத்தைகளுக்கு இந்த குரல் வழி தொடர்பு கொள்ளுதல் முக்கியமானவை ஆகும். முதுகெலும்பு உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் முக்கியத்துவமாக இவை இருந்தபோதிலும், இந்த ஒலி தொடர்பு நடத்தை எப்போது,​ எங்கே தோன்றியது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் கிடைக்கப்படவில்லை.

வெவ்வேறு உயிரினங்களின் ஒப்பீட்டுப் பகுப்பாய்வுகள் மூலம் ஒலித் தொடர்பு முறையின் பரிணாம வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இருப்பினும் அவை அனைத்து விதமான உயிரினங்களின் குழுக்களிடமிருந்து தரவுகளைப் பெறவில்லை.

சூரிச் பல்கலைக்கழக ஆய்வு: நிலத்தில் வாழும் முதுகெலும்பு உயிரினங்களில் ஒலி திறன்கள் அதிகமாக உள்ளன. இது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் பல்கலைக்கழகம் (UZH) ஆராய்ச்சியை மேற்கொண்டது. இந்த பல்கலைக்கழக வழிகாட்டுதலின் கீழ் ஒரு பல்துறை ஆராய்ச்சி குழு இதுவரை ஆராய்ச்சி செய்யப்படாத உயிரினங்களைத் தேர்ந்தெடுத்து அதன் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தது.

இது தொடர்பாக முதுகெலும்பு உள்ள உயிரினங்களான ஆமைகள், டுவாடாராக்கள், சீசிலியன்கள் மற்றும் நுரையீரல் மீன்கள் ஆகிய நான்கு முக்கிய கிளேடுகளின்(ஒரே உயிரியிலிருந்து உருவான, ஒத்த மரபணுக்களைக் கொண்ட ஒரு கிளை ) 53 இனங்கள் ஒலியால் தொடர்பு கொள்ளும் குழுக்களைச் சேர்ந்தவை என ஆராய்ச்சிக் குழு கூறியது.

ஆராய்ச்சிக் குழுவின் இந்த கூற்றுகளை நிரூபிக்க அவர்கள் தேர்ந்தெடுத்த உயிரினங்களின் குரல்களைப் பதிவு செய்தனர். அதன் சூழ்நிலை நடத்தை குறித்த தரவுகளையும் சேமித்தனர்.

சூரிச் பல்கலைக் கழகத்தின் பழங்காலவியல் நிறுவனம் மற்றும் அருங்காட்சியகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் எழுத்தாளரான கேப்ரியல் ஜோர்ஜ்விச்-கோஹன் கூறுகையில்,"1,800 வெவ்வேறு இனங்கள் உட்பட பரந்த இலக்கிய அடிப்படையிலான தரவுத்தொகுப்புடன் முழு ஸ்பெக்ட்ரம் உள்ளடக்கிய ஒலி மூலம் தொடர்பு கொள்ளும் உயிரினங்கள் நிலத்தில் மட்டும் பரவலாக இல்லை என நிரூபணமாகியுள்ளது.

400 மில்லியன்களுக்கு முன்னரான பொது உயிரினம்: ஆனால் முன்பு குரல் இல்லை என கருதப்பட்ட பல உயிரினங்கள் ஒலியியல் திறன்களைப் பெற்றுள்ளது நிரூபணமாகியுள்ளது. உதாரணமாக, முன்னர் ஊமை என நம்பப்பட்ட பல ஆமைகள் உண்மையில் விரிவான மற்றும் அதிநவீன ஒலியியல் திறமைகளைக் கொண்டுள்ளன. சுமார் 407 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒலி எழுப்பும் உயிரினங்களின் முன்னோடி உயிரினம் வாழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு வாழந்த உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் தற்போது உருமாறியுள்ள பல்லிகள், பாம்புகள், சாலமண்டர்கள், ஆம்பிபியன்கள் மற்றும் டிப்னோய் போன்ற உயிரினங்களின் ஒலி திறன்கள் பற்றிய பொருத்தமான தகவல்களை பைலோஜெனடிக் பண்பு புனரமைப்பு நுட்பங்களுடன் இணைத்துத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் தவளைகள் போன்ற நன்கு அறியப்பட்ட ஒலி எழுப்பும் உயிரினங்களின் தரவைப் பயன்படுத்தி மரத்தில் வாழும் முதுகெலும்பு உயிரினங்களின் குரல் தொடர்புகளை வரைபடமாக்க முடிந்தது.

விலங்குகளிடையே பகிரப்பட்ட பண்பாக ஒலித் தொடர்பைப் புனரமைக்க முடிந்தது எனவும், இது சுமார் 407 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடைசி பொதுவான மூத்த உயிரினத்தைப் போலவே பழமையானது எனவும் ஆராய்ச்சி தலைமை ஆசிரியர் மார்செலோ சான்செஸ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இயற்கை சூழலில் வளர்க்கப்படும் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமானவர்கள் என்கிறது ஆராய்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.