ETV Bharat / sukhibhava

பருவக் காய்ச்சல் பட்டுனு விலகணுமா? வீட்டு வைத்தியம் தெரிஞ்சிக்கங்க! - வீட்டு வைத்தியம் தெரிஞ்சிக்கங்க

காலநிலை மாற்றத்தால் உண்டாகும் பருவக் காய்ச்சலுக்கு ‘வீட்டு வைத்தியம்’ சார்ந்த மருத்துவக் குறிப்புகளைக் காணலாம்...

Home Remedies
வீட்டு மருத்துவக் குறிப்புகள்
author img

By

Published : Nov 7, 2020, 12:06 PM IST

குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தக் காலநிலை மாற்றம், பருவக் காய்ச்சலுக்கு வழி வகுக்கலாம். கொஞ்சம் உடல் வலி, ஜலதோஷம், சோர்வு என அதன் அறிகுறிகள் ஏற்பட்டவுடன் பலரும் பெரும்பாலும் மருத்துவமனைகளுக்கு படையெடுக்கின்றனர்.

ஆனால், எல்லா நோய்களுக்கும் ஆங்கிய மருந்துகளும், மாத்திரைகளும் மட்டும் தீர்வல்ல. பக்க விளைவுகளை ஏற்படுத்தாத சில வீட்டு மருத்துவக் குறிப்புகளும் உள்ளன. இவை காய்ச்சலைக் குறைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். பருவக் காய்ச்சலையும் குறைக்கும். அந்த வகையில் மருத்துவ குணம் மிகுந்த நான்கு வீட்டு உபயோகப் பொருள்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.

1. இஞ்சி

இந்தியர்களின் சமையலறைகளில் இஞ்சிக்கு தவிர்க்க முடியாத இடமுண்டு. இந்த இஞ்சி சமையலுக்கு ருசியைக் கூட்டுவதோடு நமது உடலில் ஏற்படும் பல தொற்றுகளை எதிர்க்கும் சக்தியையும் பெருக்குகிறது.

  • இஞ்சி சாறு

இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் தண்ணீர் கலப்பதே இஞ்சி சாறு. இந்தச் சாறில் கொஞ்சம் எலுமிச்சை சாறையும் சேர்த்தால் வீரியம் இன்னும் அதிகமாகயிருக்கும். இதைக் குடித்தால் காய்ச்சல் பறந்து போகும்.

2. பூண்டு

பூண்டு இடம்பெறாத அசைவ உணவுகளே இல்லை எனச் சொல்லுமளவுக்கு இஞ்சியைப் போலவே பூண்டும் சமையலறையின் அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாக உள்ளது. இதில் வைரஸ், பாக்டீரியா எதிர்ப்பு சக்தி அடங்கியுள்ளதால், பருவக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுகிறது.

  • பூண்டு சாறு

சூடான நீரில் அரைத்த பூண்டு பற்களைப் போட்டு (தேவைக்கேற்ப) 10 நிமிடம் கழித்து குடிக்க காய்ச்சல் குறையும். பூண்டிலிருக்கும் டயால் சல்பைடு உடல்சூட்டைக் குறைக்க உதவுகிறது.

Basil or tulasi
மருத்துவ குணம் மிகுந்த துளசி

3. துளசி

அளப்பரிய மருத்துவ குணங்கள் காரணமாக வீட்டு மருத்துவத்தில் மட்டுமன்றி ஆயுர்வேதத்திலும் துளசி முக்கியமான மூலிகையாகக் கருதப்படுகிறது. வைரஸ் தாக்குதல் ஏற்படாமல் காக்கும் வல்லமை துளசிக்கு உள்ளது. மண்பானையில் துளசி இலைகளிட்டு அந்த நீரைக் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

  • துளசி சாறு

துளிசி இலைகளுடன் சின்ன இஞ்சித் துண்டு சேர்த்து நீர் பாதியாக வற்றும் வரை நன்கு கொதிக்கவிட வேண்டும். இந்தச் சாற்றில் தேன் சேர்க்க விரும்புபவர்கள் அதனைக் கலந்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து முறை வரை இந்தச் சாற்றை அருந்தினால் காய்ச்சல் குணமாகும்.

4. ஆப்பிள் சைடர் வினிகர்

இது ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருள்களைப் போல அயல்நாட்டில் அத்தியாவசியமாக வைத்திருக்கும் பொருள்களின் ஒன்று இது.

Apple Cider Vinegar
ஆப்பிள் சைடர் வினிகர்
  • ஆப்பிள் சைடர் வினிகர் சாறு

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து குடித்தால் காய்ச்சல் குறையும்.

கவனம் : ஆப்பிள் சைடர் வினிகர் 1 தேக்கரண்டி + 1 டம்ளர் தண்ணீர் என்ற அளவிலேயே எப்போதும் பயன்படுத்த வேண்டும். நாள்தோறும் இதனைப் பயன்படுத்த நினைப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

முக்கியக் குறிப்பு : மேற்கண்ட நான்கு பொருள்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை எனினும், காய்ச்சலுக்கான அறிகுறிகள் அதிகம் தென்படுபவர்கள் மருத்துவரைச் சந்திப்பதே நல்லது. கரோனா காலத்தில் கவனக்குறைவு கூடாது.

இதையும் படிங்க : ஒற்றைத் தலைவலி நீங்குவதற்கு வீட்டு மருந்தே போதும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.