இமயமலை உப்பு என்பது ஒரு வித இந்துப்பாகும். இது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாவட்டத்தில் காணப்படும். இமயமலை அடிவாரத்தில் காணப்படும் இந்த உப்பு, பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் தன்னுள் கொண்டுள்ளதாகும்.
நமக்கு கிடைக்கும் உப்புகளிலேயே தூய்மையான உப்பு இந்த இமயமலை உப்பு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குளியலுக்குப் பயன்படுத்தப்படும் உப்பு, உப்பு விளக்கு, சமையல் உப்பு என இந்த உப்புக்குப் பல்வேறு வடிவங்கள் உள்ளன. இந்த உப்பின் பயன்கள் குறித்து அறிந்துகொள்ளலாம் வாருங்கள்.
உடலின் நச்சுத்தன்மையை அகற்றும்
பொட்டாசியம், இரும்பு, கால்சியம் எனப் பல்வேறு தாதுக்கள் இந்த உப்பில் அதிகளவு காணப்படுகின்றன. இந்தத் தாதுக்கள் உடம்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது.
ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
கடல் உப்பு முழுவதுமாகச் சுத்திகரிக்கப்பட்டுள்ளதால் அதில் தாதுக்களைவிட சோடியம் அதிகளவில் இருக்கும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் உப்பைவிட இமயமலை உப்பில் ஐயோடின் சத்து உள்ளது. சமையல் உப்பில் ஐயோடின் செயற்கையாகச் செலுத்தப்படும்.
செரிமானத்தை மேம்படுத்தும்
இந்த உப்பில் உள்ள அதிகமான தாதுக்கள் உடலில் சமநிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. உடலில் பிஹெச் (pH) அளவுகள் சரி சமமாக இருந்தால் நம் உடலுக்கு அதிக நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது. இதனால் நம் உடல் உணவை நன்கு செரிமானம் செய்யும்.
இதையும் படிங்க: ஊரடங்கில் வறியவர்களுக்கு உணவளிக்கும் பஸ்டார் இளைஞர்கள்!