ETV Bharat / sukhibhava

சிக்கன் Vs மட்டன்: எது ஆரோக்கியத்திற்கு கேடு.? - mutton disadvantages in tamil

மட்டன் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்குமா என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மல்ஹோத்ரா விளக்குகிறார்.

Mutton Bad For Health Nutritionist Pooja Malhotra Explanation

author img

By

Published : Feb 26, 2023, 3:42 PM IST

Updated : Mar 4, 2023, 9:52 PM IST

பெரும்பாலான மக்கள் சிக்கனை பயன்படுத்தினாலும், ஆட்டிறைச்சிக்கு தனி சுவை இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், ஆட்டிறைச்சி உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவதுபோல பல்வேறு செய்திகள் வெளியாகி, மட்டன் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இதன் விளைவாக, மட்டன் பிரியர்கள் சிக்கனுக்கு மாறி வருகிறார்கள். சிலர் ஆட்டிறைச்சியில் எந்த தீங்கும் கிடையாது என்றும் கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட குழப்பமான நேரத்தில், சிக்கனை விட ஆட்டிறைச்சியில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளதாக, ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பூஜா மல்ஹோத்ரா சமூக வலைதளப் பதிவில் விளக்கம் அளித்துள்ளார். அதில் மட்டன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அந்த நன்மைகளை சிக்கனுடன் ஒப்பிட்டு விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கத்தை கேட்டால் மட்டன் பிரியர்கள் குஷியாகிவிடுவார்கள். இதுகுறித்து அவர் கூறியதாவது,

  • ஒரு மட்டனில் சிக்கனை விட குறைவான கலோரிகள், கொழுப்புகள் உள்ளன. ஆனால், அதிக புரதம் உள்ளது.
  • மட்டனில் இரும்பு மற்றும் பொட்டாசியம் ஊட்டசத்துகள் அதிகம் உள்ளன. சிக்கனை விட குறைவான சோடியம் ஊட்டசத்து உள்ளது.
  • கோழி இறைச்சியில் சில பகுதிகள் மட்டுமே உடலுக்கு நல்லது. பல பகுதிகளில் கொழுப்பு மட்டுமே உள்ளது. அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். அதாவது, கால்கள், இறக்கைகள், தொடைகள், மார்பகப் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் கொழுப்புகள் அதிகம். எப்போதும் மார்பகப் பகுதியைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
  • ஆட்டிறைச்சி சாப்பிட்டால் பசி எடுக்காது என்று சொல்வது தவறானது. இருப்பினும் அதிகப்படியான அளவில் சாப்பிடும்போது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனத் தெரிவித்தார்.
  • கோழி இறைச்சியிலும் தீங்கு கிடையாது, மார்பகப் பகுதிகளை சாப்பிடுவது நல்லது.

இதையும் படிங்க: பாலியல் உறவில் 'இது' முக்கியம் பாஸ்

Last Updated : Mar 4, 2023, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.