ETV Bharat / sukhibhava

இதயநோய் மற்றும் பக்கவாத அபாயத்தை குறைக்கும் காலை உடற்பயிற்சி... ஆய்வில் புதிய தகவல்... - இதய நோயை குறைக்கும் காலை உடற்பயிற்சி

தினமும் காலையில் செய்யும் உடற்பயிற்சி இதயநோய் மற்றும் பக்கவாதத்தால் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Morning exercise lowers risk of heart disease and stroke: Study

author img

By

Published : Nov 16, 2022, 12:17 PM IST

நெதர்லாந்து: தினமும் காலையில் செய்யும் உடற்பயிற்சி இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் ஏற்படும் அபாயத்தை குறைப்பதாக யூரோப்பியன் ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் கார்டியாலஜி நாளிதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழக மருத்துவ மைய போராசிரியர் கலி அல்பலாக் கூறுகையில், பொதுவாக உடற்பயிற்சிக்கும் இதய ஆரோக்கியத்திற்கு தொடர்புள்ளது என்பது பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், நாங்கள் உடற்பயிற்சியின் நேரங்களின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறோம். அந்த வகையில் நேரங்களை காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் பிரித்து ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆய்வு 42 முதல் 78 வயதுக்கு இடைப்பட்ட 86,657 பேரிடம் நடத்தப்பட்டது. அதில் 58 சதவீதத்தினர் பெண்களாகும். அதில் 2,911 பங்கேற்பாளர்கள் கரோனரி தமனி நோயால் பாதிக்கப்பட்டவர்கள். 796 பேருக்கு முதல்கட்ட பக்கவாதம் உள்ளது.

இவர்கள் மேற்கொள்ளும் மாலை உடற்பயிற்சியை விட காலையில் குறிப்பாக 8 மணி முதல் 11 மணி வரை உடற்பயிற்சிகள் அவர்களது கரோனரி தமனி மற்றும் பக்கவாதம் மேலும் அதிகரிப்பதை குறைப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். சொல்லப்போனால் எந்த நேர உடற்பயிற்சியானாலும் இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. ஆனால், காலையில் செய்யப்படும் உடற்பயிற்சி 11 சதவீதம் முதல் 16 சதவீதம் கரோனரி தமனி நோயின் அபாயங்களை குறைப்பது முக்கியமான தகவலாகும். அதுமட்டுமல்லாமல், காலை உடற்பயிற்சி இதய நோய் மற்றும் பக்கவாதம் நோயாளிகளை அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. மறுப்புறம் இதய நோய் மற்றும் பக்கவாதம் நோய் அல்லாதவர்கள் காலை உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது முற்றிலும் அவை ஏற்படாமல் தவிர்க்கலாம் என்பதும் தெரியவருகிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: World COPD Day 2022: உங்கள் ஆரோக்கியமான நுரையீரல் வாழ்க்கை எதிர்கால சந்ததியினரை காக்கும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.