ETV Bharat / sukhibhava

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையை ஏற்றுக் கொள்வது கடினமா? - ஈடிவி சுகிபாவா

மன இறுக்கத்தால் (ஆட்டிசம்) பாதிக்கப்பட்ட குழந்தையை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர் எவ்வகையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.

autism  autism stigma  autism acceptance  autism mom  autism dad  autism parents  etv bharat sukhibhava health  acceptance of ASD child  ஆட்டிசம்  ஆட்டிசம் தாய்  ஆட்டிசம் தந்தை  ஆட்டிசம் பெற்றோர்  ஈடிவி சுகிபாவா  மன இறுக்கம்
Its Difficult For Parents To accept Child With Autism
author img

By

Published : Apr 5, 2021, 10:35 AM IST

சமூகமும், கல்வியும் எதிர்பாராத மன இறுக்கத்தை எவ்வாறு கையாள்வது என்று கற்றுத் தருவதில்லை. மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்றோர் ஏற்றுக் கொள்ளும்போது அனைத்தும் சரியாக நடக்கும். ஆனால், பெரும்பாலான பெற்றோர் இந்த வகையான பிரச்சினைகளை கையாள தாயாராக இல்லை என்பது தான் நிசப்தம். சில நேரங்களில் பெற்றோரும் அவர்கள் எதிர்பார்த்த குழந்தை பிறக்கவில்லை என்றும், மன இறுக்கம் பாதிக்கப்பட்ட குழந்தையின் செயல்பாடுகளைக் கண்டும் வேதனை அடைகின்றனர்.

இது குறித்து மருத்துவ உளவியலாளர் சம்ருதி பட்கர் கூறுகையில், "மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கும் போது, வாழ்க்கையில் எதிர்பாராத மன அழுத்த மாற்றங்களை இயல்பாகவே கடந்து செல்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இதை நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பற்றி பேசுவது மிகவும் முக்கியம். இது மாற்றத்திற்கு வழிவகுக்குகிறது" என்றார்.

பெற்றோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னனென்ன?

அதிர்ச்சி மற்றும் மறுப்பு - உங்கள் குழந்தையின் நடத்தையைக் கண்டு மருத்துவர் நரம்பியல் பாதிப்பு உள்ளது என தெரிவிக்க முயற்சி செய்யும் போது, அதை மறுத்து தவறுதலாக நோயறியப்பட்டுள்ளது என கூறுவது.

குற்ற உணர்வு - தாய்மார்கள் தனது செயல்பாடுகளால் நரம்பியல் பாதித்த குழந்தை தங்களுக்கு உள்ளதோ என்று குற்ற உணர்ச்சிக்கு ஆளாவது.

கோபம் - கணவர், மருத்துவர், கடவுள், சமூகத்தின் மீது கோபத்தை வெளிபடுத்துவது. தங்களுக்குள் இருக்கும் கோபத்தை அடக்குவதை விட வெளிபடுத்துவது முக்கியம்.

சோகம் - தனிமை, தன்நம்பிக்கையின்மை, மோசமாக இருப்பதாக உணர்வது.

ஏற்றுக் கொள்ளுதல் - எது நடந்தாலும் சரி என்று பெற்றோர் அதை ஏற்றுக் கொண்டு நிபுணர்களின் ஆலோசனைப்படி குழந்தையை கவனித்துக் கொள்வது.

இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை மற்றும் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டமாகும். ஒவ்வொரு பெற்றோரும் இதைக் கையாள்வதற்கு சற்று காலம் எடுத்துக் கொள்ளவேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? சர்வதேச மகிழ்ச்சி நாளன்று தெரிந்துகொள்வோம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.