இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை தடுத்திட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை எட்டு கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பூசி பணியில் முக்கிய பங்கு வகித்த அஸ்ட்ராஜெனெகா, முன்பு AZD1222 என்று அழைக்கப்பட்டது. இந்த மருந்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அதன் ஸ்பின்-அவுட் நிறுவனமான வெசிடெக்வுடன் இணைந்து கண்டுபிடித்தது.
இந்த மருந்தானது சிம்பன்சி தசையிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது, மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக அமைகிறது. இந்த தடுப்பூசிக்கு 70க்கும் மேற்பட்ட நாடுகளில் உபயோகிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII), ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 இன் மருந்தின் பதிப்பைத்தான் 'கோவிஷீல்ட் என இந்தியாவில் தயாரித்துள்ளனர்.
இதையும் படிங்க: புதிய பணிகள், புதிய பொறுப்புகள்: கரோனா வழங்கிய எதிர்கால வேலைவாய்ப்புகள்!