இந்திய மக்கள் தொகையில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களில் 40 மில்லியன் பேர் உள்ளனர். அவர்களின் வயது கூடிக்கொண்டே இருக்கும் பொருட்டு பெரும்பாலானவர்கள் மனநலம், சமூக நலன் உள்ளிட்ட பிரச்னைகளை அதிகளவில் சந்திக்க நேரிடலாம் என்கிறார் எபோக் எல்டர் கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர்.
தனிமை, மனச்சோர்வு போன்ற சொற்களை பெரும்பாலும் வயதானவர்களோடே ஒப்பிடுவதை நம்மால் பார்க்கமுடியும். ஒரு வயதானவர், அமைதியாகவோ, பிறருடன் பேசாமலோ, விஷயங்களை பகிராமல் இருப்பதை நாம் மன அழுத்தம் என்கிறோம். இதுபோன்ற ஒரு சூழலில் கிளினிகல் டிப்ரஷன் எனப்படும் மருத்துவ மன அழுத்தம் குறித்து நாம் அறிந்துக்கொள்ள வேண்டும்.
பெரும்பாலும் மன அழுத்தம் மனநலக் கோளாறு, தூக்கமின்மை, பசியின்மை போன்ற காரணங்களால் ஏற்படும். ஆனால் உங்களுக்கு மருத்துவ மன அழுத்தம் இருந்தால் உங்களின் ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் கூட நீங்கள் பேசத் தயங்குவீர்கள்.
மன அழுத்தத்திற்கு நிச்சயம் மருத்துவம் அவசியம். ஏனெனில் அது இயற்கையாகவே சில மனிதர்களுக்கு ஏற்படலாம். ஆனால் தனிமை மற்றவர்களுடன் தொடர்பில்லாமல் இருத்தல், தற்போதைய உறவில் அன்பு இல்லாமை போன்ற காரணங்களால் ஏற்படலாம். தனிமை நிலை தனித்துவிடப்பட்ட, சமூக இணக்கமின்மையை காட்டும். துரதிர்ஷ்டவசமாக தனிமை வயதானவர்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
அன்புக்குரியவரி்ன் மரணம், வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்பது, தொடர் உடல்நலக்குறைவு இதன் காரணமாக முதியவர்களின் வாழ்க்கைமுறை வெகுவாக பாதி்க்கப்படுகிறது.
தகவலை மெதுவாக உள்வாங்குதல், தொழில்நுட்பம் சார்ந்த குறைவான அறிவு, பார்வை, கேட்டல் குறைபாடு இவை அனைத்தும் முதியவர்களின் வாழ்க்கை முறையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொதுமுடக்கம், சமூக விலகலும் உலகெங்கிலும் உள்ள முதியவர்களை பாதித்ததாக கூறுகின்றனர்.
தனிமை முதியவர்களுக்கு முதுமை, இதய நோய், மருத்துவ மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள் ஆகியவற்றை கொடுக்கும். மனிதர்கள் இயற்கையிலேயே சமூகமாக வாழ்பவர்கள். சமூக சுற்றுச்சூழல், முதியவர்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் முக்கிய அங்கமாகும்.
தன்னுடைய சொந்த கதைகளை குறித்து பகிர்வது, வாழ்க்கையின் சிறந்த தருணங்களை நண்பர்கள், குடும்பத்தினருடன் பகிருவது போன்றவைதான் ஒவ்வொரு நபருக்கும் அவர் வாழ்வதற்கான நோக்கத்தை கொடுக்கும்.
தோழமை என்பது நம் வயது ஆக ஆக ஏங்கும் விஷயங்களில் ஒன்றாகும். அது செல்வம், புகழ் போன்றவற்றை விடவும் வாழ்க்கையில் மிக முக்கியமான அங்கம். அண்டை வீட்டாரிடம் நட்பு, ஆன்மீகக் குழு, அல்லது நாம் குடியிருப்பு குழுக்களில் அங்கம் வகிப்பது என ஒவ்வொன்றும் ஒரு நபரின் வாழ்வில் முக்கியப் பங்காற்றுகிறது.
2020ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தனிமையை போக்கவும் ரோபோக்கள் பெருமளவு உதவுவதாக தெரிவி்க்கப்பட்டது. தொழில்நுட்பம் ஒரு வகையில் உதவினாலும், நாம் பெரியவர்களுக்கு செய்யும் சிறு சிறு விஷயங்கள் அவர்களின் தனிமையை போக்க உதவும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
இதையும் படிங்க: பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள்