ETV Bharat / sukhibhava

அறிந்து கொள்வோம்: ஆண்களின் பாலுறுப்பு சுகாதாரம் - நோய் தொற்றை அறிந்து கொள்ளுதல்

உடல் ஆரோக்கியத்தினை உறுதி செய்வதற்காக, தனிமனித சுகாதாரத்தின் முக்கிய அம்சமாக, பாலுறுப்பு சுகாதாரம் பற்றிய விசயங்களும் வலியுறுத்தப்பட வேண்டும். நகர்மயமாதல், தனிக்குடும்பங்களின் பெருக்கம், வேலைப்பளு, நேரமின்மை போன்ற காரணங்களால் இன்றைய குழந்தைகள், இளைஞர்கள் பாலுறுப்புகளின் சுகாதாரத்தை பேணுவது தொர்பான அறிவுரைகள் பெரியவர்களிடமிருந்து பெறுவதில் சிக்கலும், இடைவெளியும் உருவாகியுள்ளன.

ஆண்களின் பாலுறுப்பு சுகாதாரம்
ஆண்களின் பாலுறுப்பு சுகாதாரம்
author img

By

Published : Jul 8, 2021, 10:31 PM IST

ஆண்களின் பாலுறுப்பு சுகாதாரம் குறித்து சில முக்கிய விசயங்களை இப்போது விவாதிக்கலாம்.

பாலுறுப்பு சுகாதாரம் என்பது பொதுவாக, ஆண்குறி, முன்தோல், மொட்டு மற்றும் இடுப்பு பகுதிகளை முறையாக பராமரிப்பதைக் குறிக்கும்.

ஆரம்பக்காலங்களில் விருத்த சேதனம் செய்யாத ஒரு ஆண் குழந்தையை குளிக்க வைக்கும் போது, தாய் அக்குழந்தையின் ஆணுறுப்பின் முன்தோலை முறையாக சுத்தம் செய்வார்; ஆணுறுப்பை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது குறித்தும் அந்த குழந்தைக்கு அறிவுறுத்துவார். பின்னர் இது ஆண்களின் தினசரி வழக்கமாக மாறியது.

இன்றைய காலக்கட்டத்தில், ஆண்குழந்தைகளுக்கு முன்தோல் சுத்தம் குறித்து வீடுகளில் கற்பிக்கப்படாததால், பல ஆண்டுகளாக அவர்களின் முன்தோல் சரியாக சுத்தம் செய்யப்படாததால், பாலுறுப்பில் சிறுநீர் மற்றும் ஸ்கலிதத்தின் போது வெளியேறும் விந்து சேர்ந்து, ஸ்மெக்மா என்றழைக்கப்படும் ஒரு படிமம் போல சேர்ந்து விடுகிறது.

அனைத்து இளைஞர்களுக்கும் பாலுறுப்பு சுகாதாரம் பற்றிய அறிவு கற்பிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் குளிக்கும் போது சாதாரண குளியல் சோப் கொண்டு ஆணுறுப்பு, முன்தோல் குறுக்கங்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். ஆணுறுப்பின் மீது சோப்பு நீர் படக்கூடாது என்ற தவறான எண்ணம் இங்கு உள்ளது. இது பொய்யான நம்பிக்கை. மருந்து சோப்பு மட்டும் தவிர்க்கப்பட வேண்டும்.

உடலுறவுக்குப் பிறகான சுகாதாரம்:

உடலுறவுக்குப் பின்னர் ஆணுறுப்பை முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பது, முன்தோல் மற்றும் ஆணுறுப்பு மொட்டில் தொற்று ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். அதுபோன்ற சூழ்நிலைகளில், ஒரு ஆணுக்கு பெண் இணையரிடமிருந்து கேண்டிடியாஸிஸ் போன்ற பாலியல் தொற்றுக்கள் பரவும் வாய்ப்புகள் அதிகம்.

இடை சுகாதாரம்

உள்ளாடை சுகாதாரம் - குளித்து முடித்ததும், உள்ளாடை அணிவதற்கு முன்பு, பாலுறுப்பு பகுதியை நன்றாக ஈரம் போக துடைக்க வேண்டும். விடுதிகள் மற்றும் பேச்சுலர் அறைகளில் தங்கியிருக்கும் இளைஞர்கள் இந்த உள்ளாடை சுகாதாரத்தைப் புறக்கணிக்கிறார்கள். தினமும் உள்ளாடை மாற்றப்பட வேண்டும்; அவை முறையாக சலவை செய்யப்பட்டு நன்றாக உலர வைக்கப்பட வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உள்ளாடையை மாற்றுவது நல்லது.

உள்ளாடை சுகாதாரத்தை முறையாக கடைபிடிக்காதவர்களின் இடை அரைகளில் சாதாரமாகவே தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதாவது அடிக்கடி அரிப்பு ஏற்படுவது, ஆணுறுப்பு மொட்டுக்களில் நிறம் கறுப்பாக மாறுவது போன்றவை நிகழ்கின்றன. இது நாள்பட்ட பூஞ்சை தொற்றாகும். ஆண் குழந்தைகளுக்கு இந்த கோணமும் அறிவுறுத்தப்பட வேண்டும்.

சரியான உள்ளாடைகளைப் பயன்படுத்துதல்

இன்றைய இளைஞர்கள் இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்களை அணிகின்றனர். இதனால் அவர்களின் அரைகளுக்கு செல்லும் காற்றின் சுழற்சி தடைபடுகிறது. மேலும் ஜீன்ஸ் பேண்ட்களை நீண்ட நாட்கள் சலவை செய்யாமலேயே அணிகின்றனர். இது அதிகப்படியான ஈரப்பதம் ஏற்படுவதற்கு வழி வகுக்கும். இதனால் அவர்களின் இடைபகுதிகளில் தொற்று ஏற்படுகிறது.

ஈரமான பகுதிகள் மற்றும் வெப்பம் அதிகம் உள்ள ஆலைகளில் வேலை செய்பவர்கள் தினமும் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும். இரவு தூங்கும் போது இறுக்கமான ஆடைகள், உள்ளாடைகள் அணிந்து தூங்குவதை தவிர்க்க வேண்டும். தளர்வான ஆடை அல்லது காற்றோட்டமான அரைக்கால் சட்டைகள் அணியலாம்

பாலுறுப்பை பாதிக்கும் பொதுவான நோய் தொற்று பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளாலேயே உண்டாகிறது.

மாணவர்களுக்கு 7ஆம் வகுப்பிலிருந்தே பாலுறுப்பு சுகாதாரம் பற்றிய தகவல்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட வேண்டும். இதனால், பாலுறுப்பு அமைப்பு, விருத்தசேதனம், ஆணுறுப்பு சுகாதாரம் மற்றும் பேணுதல், முன்தோல் குறுக்கம் மற்றும் பாலுறுப்பை சுத்தமாக வைத்திருப்பது பற்றி போதிக்க முடியும். இதன் மூலமாக சில அறிகுறிகள், நோய்க்குறிகள் அதற்கான மருத்துவ உதவிகள் பெறுவவது குறித்தும் தெரிவிக்க முடியும்.

நோய் தொற்றை அறிந்து கொள்ளுதல்

இடையின் அரைப்பகுதியில் அரிப்பு அல்லது ஆண்குறி மொட்டில் அரிப்பு உண்டாகுதல். குறியின் முனை சிவந்து இருத்தல் அல்லது வீங்கியிருத்தல், முன்தோலில் வெட்டு ஏற்பட்டிருந்தல் மற்றும் சுருங்கி விரிவதில் சிரமம் ஏற்படுதல்.

மருத்துவ உதவியை நாடுதல்

இத்தகைய அறிகுறிகளைக் கொண்ட ஆண்கள் பெரும்பாலும் வெட்கப்பட்டுக் கொண்டும் கூச்சம் காரணமாகவும் தொற்று தாங்க முடியாத அளவிற்கு மாறும் வரை மருத்துவரை அணுக தயக்கம் காட்டுகிறார்கள். இந்த மாதிரியான நோய் தொற்றுகள் அனைவருக்கும் ஏற்படும் என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே மற்ற நோய்களுக்கு மருத்துவரை அணுகுவது போல இந்த தொற்று நோய்க்கும் மருத்துவரை அணுக வேண்டும்.

இடைப் பகுதியில் ஏராளமான வியர்வைச் சுரப்பிகள் இருப்பதால், இத்தகைய நோய் தொற்றுக்கு தொடர்ச்சியான சிகிச்சைகள் எடுத்துக் கொள்வது அவசியம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு காயம் குணமாவதில் தாமதம் ஏற்படுவதால், நோய் தொற்றுக்களை குணப்படுத்துவதிலும் தாமதம் ஏற்படுகின்றது. நோய்த்தொற்று அடிக்கடி ஏற்படுமானால், நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி விருத்தசேதனம் செய்து கொள்வது நல்லது.

பாலியல் தொற்று நோய் ஏற்பட்டிருக்குமானால், அவர்களின் இணையருக்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

தொற்றுக்கு பவுடர்களை பயன்படுத்தும் தவிர்க்கப்பட வேண்டும். அவை உடலிலுள்ள துளைகளை அடைக்க வழிவகுக்கும் என்பதால் இது தீர்வு இல்லை.

நீண்ட நாள் படுக்கையில் இருக்கும் நபர்கள் மற்றும் அடிக்கடி டயப்பர்களைப் பயன்படுத்துகின்ற ஆண்களுக்கு அடிக்கடி இது போன்ற தொற்றுகள் ஏற்பட்டுள்ளனவா எனப் பார்த்து கொள்ள வேண்டும், அதற்கான சரியான கவனிப்பும் கொடுக்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க: பெண்ணுறுப்பு தளர்வை சரி செய்யும் இயற்கை வழிகள் இதோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.