ETV Bharat / sukhibhava

கரோனா வைரஸ் மூளையை பாதித்தால் என்னவாகும்?

சளி, இருமல் மூலம் பரவிய வைரஸ் காய்ச்சல் தற்போது மூளையையும் பாதிக்கும் வண்ணம் மாறி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் மூளை தொடர்பான பிரச்னைகளையும் சந்தித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அது குறித்த சிறப்புத் தொகுப்பை தற்போது காணலாம்.

Effects Of COVID-19 On Brain- Part I
Effects Of COVID-19 On Brain- Part I
author img

By

Published : Nov 11, 2020, 3:24 PM IST

ஆரம்பத்தில் ஒரு சுவாச நோய் என்று அறியப்பட்ட கரோனா தொற்று, காலப்போக்கில் மிகவும் மாறுபட்ட அறிகுறிகளையும் பின் விளைவுகளையும் வெளிப்படுத்தும் வகையில் மாற்றமடைந்துள்ளது. கரோனா வைரஸ் குறித்த தொடர்ச்சியான ஆய்வுகள், ஆராய்ச்சிகளுக்கு இடையில், நரம்பியல் பிரச்னைகள் தொடர்பாக பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குழப்பம், மயக்கமின்மை, சுவை, வாசனை இழப்பு, கவனம் செலுத்த இயலாமை, பக்கவாதம், வலிப்பு போன்ற மூளை தொடர்பான பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இருப்பினும், தற்போது இதுபோன்று மூளை தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களின் தரவு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சி அமைப்புகளின் சில ஆய்வுகளின்படி கரோனா வைரஸ் மூளையை பாதித்தால் என்னவாகும் என்ற கேள்விக்கான பதில்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மூளை மற்றும் நரம்புகளில் கரோனா வைரஸ் பாதித்தால் ஏற்படும் விளைவுகள்

கரோனா வைரஸ், மூளை செயல்பாட்டை பாதிக்குமா என்ற கேள்வியுடன் ஹைதராபாத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில், நரம்பியல் நிபுணராகப் பணிபுரியும் மருத்துவர் ஸ்ரீகாந்த் வெமுலாவை சந்தித்துப் பேசினோம். அப்போது பேசிய அவர், “கரோனா வைரஸ் மூளையில் பல வழிகளில் செயல்பட முடியும். பொதுவாக வைரஸ் ரத்த நாளங்களை பாதித்து பின்வரும் சிக்கல்களை உண்டாக்கும்.

  1. நாளங்களில் ரத்தம் உறைதல்கரோனா வைரஸ் மூளைப்பகுதிக்குள் தாக்கத் தொடங்கினால் முதலில் த்ரோம்போடிக் செயல்முறை, அதாவது ரத்த நாளங்களுக்குள் ரத்தம் உறையும் நிலை உண்டாகிறது. இதனால் ஏற்படும் கட்டிகள் ரத்த ஓட்டத்தில் கலந்து தடையை ஏற்படுத்துவதால் மூளைக்குள் மாற்றங்கள் ஏற்படலாம். அதாவது ரத்த ஓட்டம் துண்டிக்கப்பட்டு, மூளையின் ஒரு பகுதி சேதத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்படும். இது நேரடியாக பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.
  2. பக்கவாதம் ரத்த நாளங்கள் சேதமடைந்து மூளைக்குள் ரத்தப்போக்கு ஏற்படலாம். இவை பக்கவாதம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும். இந்தப் பக்கவாதம், எந்தப் பகுதியை தாக்கியுள்ளது என்பதைப் பொறுத்து, ஒரு கை, கை மற்றும் கால், வாய், பேச்சு அல்லது பார்வை இழப்பு, நடப்பதில் சிரமம் போன்றவை ஏற்படும். சில நேரங்களில், கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டால் கோமா நிலை அல்லது மரணத்தை எட்டவும் வாய்ப்புள்ளது.
  3. பெருமூளை ரத்த நாளங்களில் உறைதல் (சி.வி.டி) நோயாளிகளுக்கு ரத்த நாளங்களில் கட்டிகள் இருப்பது மட்டுமல்லாமல், மூளையில் உள்ள நரம்புகளிலும் கட்டிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது பெருமூளையிலுள்ள ரத்த நாளங்களிலும் உறைதலை ஊக்குவிக்கிறது. இது தலைவலி, உடலின் சிலப் பகுதிகளில் பலவீனம், கவனக்குறைவு ஆகியவை தொடங்கி கோமா நிலை வரை வழிவகுக்கும்.

மூளையில் ஏற்படும் பிற விளைவுகள்

  • ’என்செபலிடிஸ்’ எனப்படும் மூளையில் ஏற்படும் வீக்கம்
  • ’என்செபலோபதி’ எனப்படும் மூளை நோய், அதாவது மூளையை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் பிரச்னை. மூளையின் செயல்பாடுகள் முற்றிலுமாக மாற்றமடையத் தூண்டப்படுவதால் கவனச் சிதறல் ஏற்படும்.
  • இதன் ஆரம்பக் காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் பொதுவாக குழப்பமான நிலையில் இருப்பார்கள்
  • இது கடுமையானதாக இருக்கும்போது, பாதிக்கப்பட்ட நபர்கள் ​​மயக்கம், தூக்கம் போன்றவற்றால் நீண்ட நேரம் விழித்திருக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவர்
  • இது மிகவும் கடுமையானதாக இருக்கும்போது, ​​பாதிக்கப்பட்டவர் கோமா நிலைக்குச் செல்லும் வாய்ப்புள்ளது.
  • மூளையின் ஒருபுறத்தில் ஏற்படும் மாற்றம் வலிப்பிற்கு வழிவகுக்கிறது. இவை தானாகவோ அல்லது பிற மூளை பிரச்னைகளின் காரணமாகவே தென்படலாம்.

கரோனா வைரஸ் காரணமாக இதுவரை ரத்த சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு அளவு, பக்கவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்படாத நபர்களும், பரம்பரை வியாதிகளால் தாக்கப்படாத நபர்களும்கூட, முதல்முறையாக இதுபோன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகிறார் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களும் தெரியவந்துள்ளன.

கரோனா வைரஸால் பாதிக்கப்படட் மக்கள், அல்லது சில நாள்களுக்கு முன்பு கரோனா வைரஸிலிருந்து மீண்டவர்கள் சில காலத்திற்குப் பிறகு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குணமடைந்த நபர்களில் சிலர் ரத்தக் கசிவு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதற்கான ஆவணங்களும் உள்ளன” என்றார்.

மூளைக்கு என்ன நடக்கிறது?

”கரோனா வைரஸ் மூளையை ஏன் பாதிக்கிறது?” என்பதற்கு பின்வரும் சாத்தியமான காரணங்களை முன்வைக்கிறார் மருத்துவர் ஸ்ரீகாந்த்

”மூளையில் ரத்தம் உறையும் காரணத்தினாலே அநேகமாக மாற்றங்கள் ஏற்படலாம். இதன் விளைவாக ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளிலும் ரத்தம் உறைதல் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிலும் பல்வேறு குறுக்கீடுகள் நடைபெறுகின்றன. இது உடலில் தேவையற்ற நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக ஒருவரின் உடலின் செயல்பாடுகள் சீர்குலைகிறது.

சீனாவிலும் ஜப்பானிலும் பதிவான சில தகவல்களின்படி, கரோனா வைரஸின் மரபணுப் பொருள் முதுகெலும்பு திரவத்தில் காணப்பட்டதாக ஆய்வுகளும், சமீபத்திய செய்தி அறிக்கைகளும் கூறுகின்றன. புளோரிடாவில் ஒருவருக்கு மூளை உயிரணுக்களில் வைரஸ் துகள்கள் கண்டறியப்பட்டன. இது, வைரஸ் ரத்த ஓட்டத்திலோ அல்லது நரம்பு மண்டலங்களுக்கு உள்ளுமோ நுழைவதற்கான வாய்ப்பைக் காட்டுகிறது.

மற்றொரு கோட்பாட்டின்படி, கரோனா வைரஸால் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் அனைத்தும் அதிக காய்ச்சல் முதல் குறையும் ஆக்ஸிஜன் அளவு, பல உறுப்புகளின் தோல்விகள் வரை - மயக்கம் அல்லது கோமா போன்ற மூளை செயலிழப்புகள் என அனைத்திலும் பங்களிக்கின்றன எனக் கூறுகின்றன.

ஆகையால், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் நரம்பு மண்டலம் இயல்பாக பாதிக்கப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான சரியான காரணங்கள் தற்போதுவரை கண்டறியப்படவில்லை. கரோனா வைரஸ் உருவான முதல் நாள் முதல் அதன் அறிகுறிகள் மற்றும் விளைவுகள் தொடர்ந்து மாற்றமடைந்து வருகின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை” என்றார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி: இருள் சூழ்ந்த சுரங்கப் பாதையில் கிடைத்த ஒளி - பொருளாதார நிபுணர் சுனில் சின்ஹா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.