கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள சமூக விலகலைக் கடைபிடிப்பது, முகக் கவசங்கள் பயன்படுத்துதல், கைகளை சானிடைசர்கள் மூலம் கழுவுவது ஆகியவற்றைப் பின்பற்றுமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, கைகளால் தொடாமல் பயன்படுத்தப்படும் சானிடைசர்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆர்சிஐ இயக்குநர் நாராயணமூர்த்தியை உள்ளடக்கிய விஞ்ஞானிகள் குழு, கைகளை உபயோகிக்காமல் பயன்படுத்தும் சானிடைசர்களை இரண்டு வாரத்திற்குள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சானிடைசர்களில் எவ்வித கெமிக்கலும் பயன்படுத்தாததால், இதனை என்-95 முகக் கவசங்கள், பணத்தாள்கள், பாஸ், புத்தகங்கள், மொபைல், அலைபேசி ஆகியவற்றையும் சுத்தம் செய்துகொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தும் என்-95 முகக் கவசங்களை இந்த சானிடைசர்கள் மூலம் மறுசுழற்ச்சி செய்வது பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பை பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த சானிடைசர்கள் யுவி கதிர்களின் உதவியால் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வைரஸின் டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏ-வை தாக்கி, அதன் பரவலைத் தடுக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யுவி கதிர்கள் மனிதர்களுக்கு ஏற்றதல்ல என்பதால், இந்த சானிடைசர்களுடன் சில பாதுகாப்பு அம்சங்களும் இணைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பணத்தாள்கள் உள்ளிட்டவற்றை இந்த சானிடைசர்களால் சுத்தம் செய்ய முடியும் என்பதால், வங்கி ஊழியர்களிடையே வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோவிட்-19 தொற்றை சம்மாளிப்பது எப்படி? கேரளாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை என்னென்ன? - நிபுணர்