ETV Bharat / sukhibhava

சர்க்கரையால் மட்டும் நீரிழிவு நோய் வராது; உப்பு சேர்ப்பதாலும் நீரிழிவு வருமாம்! - newyork

Does eating too much salt cause diabetes in Tamil: அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 9:57 PM IST

நியூயார்க் (அமெரிக்கா): நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் சர்க்கரையும், சர்க்கரை சார்ந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்காவின் ஆய்வு கூறுகிறது.

உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பது டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்குமா? என்ற நோக்கில் ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்காவிலுள்ள துலேன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பது டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வு குறித்து மயோ கிளினிக் ப்ரோசீடிங்ஸ் (Mayo Clinic Proceedings) என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

தனி நபர் உப்பு உட்கொள்வதன் அளவைப் பொறுத்து, 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு, ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களை 11 ஆண்டுகள் 8 மாதங்கள் வரை கவனித்ததில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதிகளவு உப்பு நுகர்வு டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

சில நேரங்களில் நான் உப்பு அதிகமாகச் சேர்ப்பேன் என்பவர்களுக்கு 13 சதவீதமும், எப்போதும் அதிகமாகச் சேர்ப்பேன் என்பவர்களுக்கு 20 முதல் 39 சதவீதமும் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. துலேன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் முன்னணி எழுத்தாளர் டாக்டர் லு குய், “உப்பு உட்கொள்வதை கட்டுப்படுத்துவதன் மூலம் இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.

மேஜையிலிருந்து சால்ட் ஷேக்கரை நீக்கிவிடுவதன் மூலம் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படாமல் தவிர்க்கலாம்” என்று கூறியுள்ளார். மேலும் அதிகமாக உப்பு உட்கொள்வது, உடலின் பிஎம்ஐ (BMI - Body Mass Index) மற்றும் மேல் இடுப்பு, கீழ் இடுப்பு இடையிலான விகிதம் (WHR - Waist to Hip Ratio) போன்றவற்றை அதிகரிக்கும்.

மேலும் உடல்பருமன், உடலில் வீக்கம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. குறைந்த அளவில் சோடியம் உள்ள உணவுகளை உண்பது நல்லது என்று டாக்டர் லு குய் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசியினால் கருச்சிதைவு ஏற்படுமா?... ஆய்வுகள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.