ETV Bharat / sukhibhava

உங்க பரம்பரைக்கே இனி புற்று நோய் வராது: இதை மட்டும் கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க.! - புற்று நோய் அறிகுறிகள்

Black Cumin Health Benefits in Tamil: உயிரை கொன்று குவிக்கும் புற்று நோய் அபாயத்தில் இருந்து உங்களையும், உங்கள் சந்ததியையும் தற்காத்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறையை மட்டும் பின்பற்றுங்கள்.

கருஞ்சீரகம்
கருஞ்சீரகம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 4:48 PM IST

Updated : Nov 8, 2023, 5:09 PM IST

சென்னை: பல வருடங்களுக்கு முன்பு புற்று நோய் என்ற வார்த்தையை எங்கோ, யாரோ சொல்லிக் கேட்டிருப்போம். ஆனால் இன்று, நம் வீட்டில் அல்லது நம்மில் சிலருக்கு புற்று நோய் ஏற்படும் அபாயகரமான வாழ்க்கை முறையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.

மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், கணைய புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் எலும்பு புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், தோல் புற்றுநோய், இரத்த புற்றுநோய் என்று எண்ணிலடங்கா புற்றுநோய்கள் நம்மை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. புற்றுநோயின் ஆதிக்கத்தால், உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் சிறப்பு புற்றுநோய் மற்றும் சிகிச்சை பிரிவுகள் இயங்க ஆரம்பித்துவிட்டன. இது ஒரு பக்கம் இருக்க புற்று நோயை அடியோடு அகற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டனவா என்று கேட்டால் அதுவும் முழுமையாக கிடையாது என்றே கூறலாம்.

புற்றுநோயை கட்டுப்படுத்த முன்னோர்கள் யுக்தி: பாட்டி வைத்தியம் இன்றைய தலைமுறையினர் பலருக்கு விளையாட்டாகத் தெரியலாம். ஆனால், நம் முன்னோர்கள் மருந்தை உணவாக அல்ல, உணவை மருந்தாக உட்கொண்டு பல கொடிய நோய்களில் இருந்து, அதிலும் குறிப்பாக புற்று நோய் அபாயத்தில் இருந்து, தங்களையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்தவர்கள் என்றால் அது மிகையாகாது. அப்படி புற்று நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள அவர்கள் மேற்கொண்ட யுக்தி என்ன தெரியுமா? கருஞ்சீரகம்தான்.

கருஞ்சீரகத்தின் மகத்தான மருத்துவப் பண்புகள்: இந்த கருஞ்சீரகம் பல்வேறு மருத்துவ பண்புகள் கொண்டிருந்தாலும், புற்று நோயை அடியோடு அகற்றும் தன்மை உடையது எனக்கூறப்படுகிறது. இதை பல மருத்துவ ஆராய்ச்சிகளும் உறுதி செய்திருக்கின்றன. கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது உடலில் புற்றுநோயை உருவாக்கும் ப்ரீ ரேடிகல்ஸ்களுக்கு எதிராக போராடுகிறது. மேலும் எலும்பு மஜ்ஜை உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, புற்றுநோய் கட்டிகள் உருவாகாதவாறு பாதுகாக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய வைத்தியத்தில் முக்கியப் பங்காற்றும் இந்த பெருஞ்சீரகத்தின் புற்று நோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து நெஷ்னல் லைப்ரரி ஆஃப் மெடிசின் (National Library of Medicine) இணையதளப் பகத்தில் பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இது குறித்து இன்று வரை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கருஞ்சீரகம் புற்று நோய் கிருமிகளை எதிர்த்துப் போராடும் என்ற தகவலை தவிற அதனுடய எந்தெந்த பண்புகள் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்பது புரியாத புதிராகவே இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கருஞ்சீரகத்தில் இருக்கும் தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் மட்டும் இன்றி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றுதல், இதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு நலன்களை தருகிறது எனவும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும், கருஞ்சீரகத்தில் இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள், கால்சியம், விட்டமின்கள் போன்றவை உள்ளன. இவை ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினைகளையும், வீக்கம், மாதவிடாய் கோளாறு போன்றவற்றையும் சரிசெய்யும்.

முன்னோர்கள் பெருஞ்சீரகத்தை எவ்வாறு பயன்படுத்தினார்கள் தெரியுமா? நாள்தோறும் காலையில் சாப்பாடு செய்யும்போது, பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதித்த பிறகு அரிசியை போடுவார்கள். அதனுடன் பருத்தி துணி ஒன்றை எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் கருஞ்சீரகத்தை கட்டி அரிசியை போட்ட உடனேயே, துணியால் கட்டப்பட்ட கருஞ்சீரகத்தையும் அதில் போட்டு வேக வைக்க வேண்டும். சாப்பாட்டை வடிப்பதற்கு தயாராகும்போது அந்த கருஞ்சீரக கட்டை எடுத்து நன்றாக சாப்பாட்டில் பிழிந்துவிட்டு சக்கையை அகற்றிவிட வேண்டும். அந்த உணவை நாம் அடிக்கடி உட்கொண்டு வரும்போது உடலில் புற்று நோய் தாக்கம் இருந்தால் அது முற்றிலுமாக அகற்றப்பட்டு விடும் எனக்கூறப்படுகிறது. இது மட்டும் இன்றி, கருஞ்சீரகத்தை வேறு வழிகளிலும் அடிக்கடி உட்கொள்வது சிறந்தது எனவும் தெரிய வந்துள்ளது. ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற அடிப்படையில், கருஞ்சீரகத்தை அதிகமாகவும் உட்கொள்ளக்கூடாது எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: இந்த ரகசியம் தெரிஞ்சா.. இஞ்சி தோலை இனிமே தூக்கி வீச மாட்டீங்க!

Last Updated : Nov 8, 2023, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.