ETV Bharat / sukhibhava

இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்!

குளிர்காலங்களில் வரும் வைரஸ் பாதிப்பான குளிர்காய்ச்சல் (இன்ஃப்ளூயன்ஸா) அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

குளிர்காய்ச்சல் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி நிமோனியா The Symptoms Of Influenza Influenza Do Not Ignore The Symptoms Of Influenza

author img

By

Published : Dec 4, 2020, 10:55 PM IST

குளிர்காலத்தில் பல வகையான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் காரணமாக, பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவுவதற்கான ஆபத்து உள்ளது. இதில் அதிகளவு பாதிப்பு தரக்கூடியது இன்ஃப்ளூயன்ஸா என்னும் குளிர்காய்ச்சல் ஆகும். இந்தக் காய்ச்சல் ஏற்பட்டால், மூக்கு, தொண்டை, நுரையீரல் உள்ளிட்ட சுவாச மண்டலம் பாதிக்கப்படும்.

இது ஒரு தொற்று நோயாகும். இது புறக்கணிக்கப்பட்டால், நிலைமையை மோசமாக்கும். அதற்கான தடுப்பூசி கிடைப்பதால், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 முதல் 12 வரை, இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி வாரம் அனுசரிக்கப்படுகிறது.

இன்ஃப்ளூயன்ஸா எவ்வாறு பரவுகிறது?

இன்ஃப்ளூயன்ஸா ஒரு தொற்று நோய். இது இருமல், சளி மற்றும் லேசான காய்ச்சலுடன் தொடங்குகிறது. மூக்கு, கண்கள் மற்றும் வாய் வழியாக இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் நம் உடலில் நுழைகிறது.

பாதிக்கப்பட்ட நபர் இருமல் அல்லது தும்மும்போது, ​நீர்த்துளிகள் காற்றில் கலக்கின்றன. இதனை மற்றொரு நபர் சுவாசிக்கும்போது, அவன் அல்லது அவள் வைரஸால் பாதிக்கப்படுகிறார். இது தவிர, ஆரோக்கியமான நபர் கூட இந்த வைரஸை தொட்டால் தொற்றிக்கொள்ளும்

காய்ச்சல் அதிகரித்தால் நிமோனியா பாதிப்பு

இன்ஃப்ளூயன்ஸா நோய்த்தொற்றின் கடுமையான நிகழ்வுகளில், நோயாளிக்கு நிமோனியா உருவாக வாய்ப்புள்ளது. இந்த தொற்று காரணமாக சைனஸ் மற்றும் காது நோய்த்தொற்றுகளும் ஏற்படலாம். நிலைமைகள் கடுமையாக இருந்தால், வீக்கம் மற்றும் நுரையீரல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

மற்றவர்களுடன் ஒப்பிடும்போது ​​65 வயதிற்கு மேற்பட்டவர்கள், சுகாதார ஊழியர்கள், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீது இந்த தொற்று எளிதாக பரவும்.

தடுப்பூசி பரிந்துரை

இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குளிர் மற்றும் பருவகால நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், சுவாச மண்டலத்தை பலப்படுத்துகிறது.

பெரும்பாலான நாடுகளில் காய்ச்சல் பருவகால நோய்த்தொற்றுகளைத் தடுக்க வருடத்திற்கு ஒரு முறை தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள், 6–59 மாத வயதுடைய குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போன்ற தொற்றுநோய்களுக்கு அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு தடுப்பூசி கொடுக்க முன்னுரிமை அளிக்க உலக சுகாதார நிறுவனம் நாடுகளை ஊக்குவிக்கிறது.

சில இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகள் ஊசி வடிவில் கொடுக்கப்படுகின்றன, சில இன்ட்ரானசல் ஆகும், அதாவது அவை நாசி பத்தியின் மூலம் வழங்கப்படுகின்றன.

இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள்

நீங்கள் இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் பாதித்திருந்தால், உங்களது உடல் நாள் முழுவதும் சோர்வாக உணரக்கூடும்.

உடல் பலவீனம் மற்றும் தலைசுற்றல் இருக்கும்.

குளிரில் உடல் நடுங்கும், அதிக காய்ச்சல் இருக்கும்.

இது தவிர, தொண்டையில் கபம் குவிந்து எதையும் விழுங்குவதில் சிரமம் ஏற்படும்.

மூச்சு விடுவதில் சிரமம்

தும்மல்

தோள்பட்டை தசை மற்றும் தலை வலி

பாதுகாப்பது எப்படி?

இன்ஃப்ளூயன்ஸா வைரஸைத் தடுக்க தூய்மை மிக முக்கியமானது. எனவே, சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருங்கள். அதே போல் கழிப்பறைகளுக்குச் சென்றபின்னும், சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

நல்ல சத்தான உணவை உண்ணுங்கள், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். கனமான, பழைய மற்றும் ஆரோக்கியமற்ற துரித உணவுகளிலிருந்து விலகி இருங்கள்.

உணவுப் பொருள்கள்

இன்ஃப்ளூயன்ஸாவின் போது உடலில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், ஏராளமான தண்ணீர், தேங்காய் நீர், மோர், பால், லஸ்ஸி, தண்ணீர் மற்றும் சாறு ஆகியவற்றைக் குடிக்கவும். நீங்களே தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். உங்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் இருந்தால் உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: குளிர் காலத்தைச் சமாளிப்பது எப்படி? அசத்தலான டிப்ஸ்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.