ETV Bharat / sukhibhava

செரிமான பிரச்னையா? இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்.. - செரிமான கோளாறு காரணம்

How to fix indigestion at home in tamil: நம்மில் பலர் செரிமான பிரச்னையால் பாதிக்கப்பட்டு அதனுடன் தொடர்புடைய பல்வேறு உடல் நலக்கோளாறுகளை எதிர்கொள்கின்றனர். இந்த செரிமான பிரச்னை எதனால் வருகிறது? இதை எப்படிச சரி செய்வது எனப் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 9:12 PM IST

சென்னை: இன்றைய நவீன காலkகட்டத்தில் வாழ்வியல் நடைமுறை மற்றும் உணவுப் பழக்க வழக்கத்தால் பலர் பல்வேறு உடல் நலக்கோளாறுகளை எதிர்கொள்கின்றனர். அதில் மிகவும் முக்கியமான ஒரு பிரச்னை செரிமானக் கோளாறு. இந்த செரிமான பிரச்னை காரணமாக நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, வயிற்றில் அசவுகரியம், தலைவலி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதன் காரணத்தால் நாம் செய்யும் வேலைகளில் சரியான கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படலாம்.

உணவுப் பழக்க வழக்கம்: நம்மில் பலர் உண்ணும் உணவிலும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்திலும் சரியான கவனம் செலுத்தத் தவறுகிறோம். இதன் காரணமாக நொறுக்குத் தீனிகள், துரித உணவுகள், எண்ணையில் பொறித்த உணவுகள், அதீத காரம் மற்றும் சுவையூட்டிகள், நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். அது மட்டும் இன்றி உணவு உட்கொள்ளும் நேரம், உறங்கும் நேரம் என அனைத்திலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களையே செய்கிறோம். இவைதான் செரிமான பிரச்னைக்கான முக்கியக் காரணம்.

புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல்: இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலர் ஸ்டைல் என்ற பெயரில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை ஊக்குவிக்கின்றனர். அந்த வகையில் புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஒரு சமூக நோயாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக உங்கள் உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படும். அதில் ஒன்று இந்த செரிமான பிரச்னை.

மசாலா பயன்பாடு: இன்று உணவு சத்தானதாக இருக்க வேண்டுமோ, இல்லையோ ருசியானதாக இருக்க வேண்டும் என்பதில்தான் பலரும் கவனம் செலுத்துகிறார்கள். இவர்களைக் குறி வைத்து ஏராளமான மசாலா நிறுவனங்கள் தங்கள் பொருட்களைப் புதிது, புதிதாகத் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது.

சைவம், அசைவம் என அனைத்திற்கும் மசாலாக்கள்தான். வீடுகள் முதல் ரோட்டுக்கடை, ஸ்டார் உணவகங்கள் என எங்கு பார்த்தாலும் மசாலா பொருட்கள்தான். இந்த மசாலா நிறைந்த பொருட்களை அதிகம் உட்கொள்ளும்போது, உங்களுக்கு அஜீரணக்கோளாறு ஏற்படலாம். மேலும், காலையில் மசாலா நிறைந்த உணவை உட்கொள்வதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்: சாலை ஓரங்களில் எங்கு பார்த்தாலும் துரித உணவுக்கடைகள்தான். இந்த உணவகங்களில் சுவையான உணவு கிடைக்குமே தவிர, சுகாதாரமான உணவோ அல்லது அம்மா கையில் செய்வதுபோல் சத்தான உணவோ கிடைக்காது.

அது மட்டும் இன்றி அங்கு விற்கப்படும் உணவுகளில் பல்வேறு சுவையூட்டிகள், நிறமூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதை நீங்கள் அடிக்கடி உட்கொள்வதால் குடலில் புண் ஏற்படலாம். பசியின்மை, வாயு தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு கோளாறுகள் ஏற்படலாம்.

குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம்: குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை அடிக்கடி உட்கொள்ளும்போது, அது உங்கள் செரிமான மண்டலத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்கிறார்கள், மருத்துவர்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இளைஞர்களும், குழந்தைகளும்தான். இதன் காரணத்தால் குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம் உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

செரிமான அமைப்பை மேம்படுத்த என்னென்ன செய்யலாம்?

1. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள்.

2. நேரத்திற்குச் சாப்பிடுங்கள். காலை உணவை காலை 8 முதல் 9 மணிக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும். மதியம் 12 மணி முதல் 2 மணிக்குள் உணவு உட்கொள்ள வேண்டும். தாமதமாகச் சாப்பிட்டால் உணவு சரியாக ஜீரணமாகாது.

3. இரவு 8 மணிக்கு முன்பு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உணவு உட்கொண்டவுடன் உடனடியாக படுத்துக் கொள்ளாமல், சிறிது நேரம் நடப்பது நல்லது. இதனால், உணவு விரைவாக ஜீரணமாகும். இது நல்ல தூக்கத்தையும் ஏற்படுத்தும்.

4. வேலையின் நிமித்தமாகவும், உடல் எடையைக் குறைக்கவும் வேண்டி பலர் உணவு உட்கொள்வதை தவிர்ப்பார்கள். ஆனால், இது செரிமான மண்டலத்தை மிகக் கடுமையாகப் பாதிக்கும்.

5. பலர் நள்ளிரவு வரை செல்போன் மற்றும் லேப்டாப் பயன்படுத்துகின்றனர். இதனால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது. குறிப்பாக, செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு, உட்கொண்ட உணவு ஜீரணமாகாமல் தவிப்பார்கள்.

6. செரிமான அமைப்பு சரியாக வேலை செய்ய, காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து குடிக்கவும்.

7. பலர் டீ, காபி அதிகம் குடிப்பார்கள். ஆனால், அவற்றை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.

8. மசாலா நிறைந்த உணவு, துரித உணவு, குளிர்பானம் போன்றவற்றை முடிந்தவரை குறைக்க வேண்டும். வீட்டில் சுகாதாரமாக சமைத்த உணவை உண்ண வேண்டும்.

9. உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுங்கள்.

10. தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் செரிமான பிரச்னைகள் பெருமளவு குறையும்.

இதையும் படிங்க: How to use hair extensions: ஹேர் எக்ஸ்டென்ஷன் பயன்படுத்துறீங்களா.? எச்சரிக்கையோட இருங்க.!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.