டெல்லி: டெல்லி மௌலானா ஆஸாத் மருத்துவக் கல்லூரி டாக்டர். சுனிலா கார்க் ஈடிவி பாரத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, “ 2022 அல்லது 2023ஆம் ஆண்டுக்குள் கோவிட் தடுப்பூசி இந்தியா வந்தடையும்” என்றார்.
சுனிலா கார்க் மேலும் கூறுகையில், “ஒவ்வொரு நபருக்கும் இரண்டு தடுப்பூசிகள் தேவைப்படும். இந்த தடுப்பூசிகளை பாதுகாக்க குளிர் பாதுகாப்பு வசதிகள் தேவைப்படும்.
இந்தியர்களுக்கு 2022 அல்லது 2023ஆம் ஆண்டுக்குள் தடுப்பூசி கிடைத்துவிடும். எனினும் இது தடுப்பூசி உற்பத்தியை சார்ந்தது.
137 கோடி மக்கள்
இந்தியாவை பொறுத்தமட்டில் 137 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதில் 80 சதவீத மக்கள் பல்வேறு வயது குழுக்களை சார்ந்தவர்களாக உள்ளனர். 25 சதவீதம் பேரின் உடலில் தேவையான அளவு நோயெதிர்ப்பு சக்தி காணப்படுகிறது.
இந்நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி என்பது மிகப்பெரிய பணிதான். இதனையெல்லாம் கருத்தில்கொண்டுதான் அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
தனியாரின் பங்கு
அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதில் தனியாரின் பங்கு முக்கியமானது. மனிதவளம், தடுப்பூசி பாதுகாப்பு பாதுகாப்பு வசதிகள் இதில் முக்கியமானவை.
மேலும் இந்தியாவில் 70 விழுக்காடு மக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். முதல் இரு தர மக்கள் வசிக்கும் நகரங்களில் 70 சதவீத மக்கள் தனியார் மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். இங்கு தனியார் மருத்துவமனைகளின் பங்கு மிக அதிகம்.
கோவிட் ஆப் (செயலி)
ஆகவே பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி கிடைப்பதில் தனியார் மருத்துவமனைகளிடமும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கோவிட் ஆப் (செயலி) மத்திய அரசால் உருவாக்கப்படும். இதில் கோவிட் தடுப்பூசி குறித்த தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
மேலும், கோவிட் தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு தகவல் அளிக்கப்படும். இந்தத் தகவலின் பேரில் கோவிட் தடுப்பூசி முன்னுரிமை பார்த்து வழங்கப்படும்” என்றார்.
சீரம் மருத்துவ நிறுவனம்
முன்னதாக, சீரம் தலைமை செயல் அலுவலர் ஆதர் பூணவல்லா இந்தியர்களுக்கு தடுப்பூசி கிடைக்க இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அவரின் கூற்றுப்படி, “மத்திய அரசு பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், காவலர்கள் மற்றும் 50 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படும். அதன் பின்னர் அனைவருக்கும் தொடர்ச்சியாக தடுப்பூசி கிடைக்கும்” என்பது நினைவுக்கூரத்தக்கது.
இதையும் படிங்க: உலகின் முதல் தடுப்பூசி மருந்தாக செயல்பாட்டுக்கு வருகிறதா ’கோவிஷீல்ட்’?