டெல்லி: சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆதர் பூனவல்லா வியாழக்கிழமை (நவ.19) கூறுகையில், “ஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முதியவர்களுக்கு 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் கிடைத்துவிடும்.
இது அனைத்து மக்களுக்கும் ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும். இதன் விலை ரூ.1000. அனைத்து இந்தியர்களுக்கும் 2024ஆம் ஆண்டுக்குள் கோவிட் தடுப்பூசி கிடைத்துவிடும்” என்றார்.
இதையடுத்து கோவிட் தடுப்பூசியின் விலை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, அது அமெரிக்க டாலருக்கு 3-4 என நிர்ணயிக்கப்படும். இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.1000 ஆக இருக்கும் என்றார்.
மேலும் 2021ஆம் ஆண்டில் 10 கோடி மருந்துகள் தேவைப்படும் என்றும் அவர் கூறினார். கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
நவ.18ஆம் தேதி 24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் அங்கு உயிரிழந்தனர். இதையடுத்து அவசர சிகிச்சை படுக்கைகளை அதிகரித்து தர வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் மத்திய அரசிடம் கோரியிருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: உலகின் முதல் தடுப்பூசி மருந்தாக செயல்பாட்டுக்கு வருகிறதா ’கோவிஷீல்ட்’?