ETV Bharat / sukhibhava

சாதாரண சளியா? ஒமைக்ரானா? அறிகுறிகள் சொல்வதென்ன? - ஒமைக்ரான்

நடப்பது குளிர்காலம் என்பதால் பலருக்கும் சளி காய்ச்சல் உள்ளிட்ட தொல்லைகள் காணப்படுகின்றன. இதற்கு மத்தியில், நம்மை பாதித்திருப்பது சாதாரண சளியா அல்லது ஒமைக்ரான் பாதிப்பா என்பதை கண்டறிவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

Cold
Cold
author img

By

Published : Jan 7, 2022, 11:25 AM IST

ஹைதராபாத் : அதிகரித்து வரும் பாதிப்புகள் மற்றும் மாறிவரும் வானிலைக்கு மத்தியில், சளி, இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் உங்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளலாம். அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.

நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் இன்னும் குளிர்காலத்தை அனுபவித்து வருகின்றன அல்லது குளிர்காலம் முடிவடைய உள்ளதால் வானிலையில் படிப்படியாக மாற்றங்கள் ஏற்படுகின்றன.

Common Cold Or Omicron? What Do The Symptoms Say?
காலநிலை மாறுபாடு

இத்தகைய காலநிலையில் ஒரு நபருக்கு சளி மற்றும் இருமல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஜலதோஷம் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட கோவிட்-டின் ஒமைக்ரான் மாறுபாட்டின் பரவலுக்கு மத்தியில், மக்கள் வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சிகிச்சையைப் பெற வேண்டும்.

சளி, ஒமைக்ரான் வித்தியாசம்

இருமல், சுவை மற்றும் வாசனை இழப்பு, சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் அதிக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளால் கோவிட் பொதுவாக அடையாளம் காணப்படுகின்றன.

ஆனால், புதிய கோவிட் ஒமைக்ரானைப் பற்றி நாம் பேசினால், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் படி, மூக்கு ஒழுகுதல், தொடர்ந்து இருமல், சோர்வு மற்றும் எரிச்சல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். இது தவிர, குமட்டல் மற்றும் பசியின்மை ஆகியவை மாறுபாட்டின் இரண்டு புதிய அறிகுறிகளாக இருப்பதை ஸோ (Zoe) என்ற செயலி தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.

தீவிர அறிகுறிகள்

தொண்டை வலி, உடல் வலி, இரவில் வியர்த்தல் மற்றும் தும்மல் ஆகியவை மற்ற அறிகுறிகளாகும். ஒமைக்ரானின் இந்த அறிகுறிகள் பொதுவான சளி மற்றும் இருமலுடன் அடிக்கடி குழப்பமடையலாம்.

ஏனெனில் தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல், அதைத் தொடர்ந்து இருமல், தும்மல் மற்றும் தலைவலி ஆகியவை பிந்தைய அறிகுறிகளாகும்.

கரோனா பரவல்

இரண்டு நிலைகளிலும் உள்ள வைரஸ் மேல் சுவாச மண்டலத்தை பாதிக்கும் என்பதால் அறிகுறிகள் மிகவும் ஒத்தவை. அறிகுறிகள் தவறாக இருக்கலாம் என்றாலும், ஒரு நபர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருந்தால், அறிகுறிகளின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அதிக தண்ணீர் குடியுங்கள்

இருப்பினும், நீங்கள் இன்னும் குழப்பமாக இருந்தால், சரியான சிகிச்சையைப் பெற, வைரஸை நீங்களே பரிசோதித்துக்கொள்ளுங்கள். இதற்கிடையில், ஆஸ்திரேலிய வல்லுநர்கள் வீட்டிலேயே கோவிட் நோயிலிருந்து மீள்வதற்கு தண்ணீர் உட்கொள்ளலை அதிகரிக்கவும், சரியான படுக்கை ஓய்வை உறுதிப்படுத்தவும் பரிந்துரைக்கின்றனர்.

முந்தைய வகைகளுடன் ஒப்பிடும்போது, குறிப்பாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு, ஒமைக்ரான் கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்தாது என்று இதுவரை அறிக்கைகள் காட்டுகின்றன. ஆனால் சமீபத்திய அறிக்கையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் மரியா வான் கெர்கோவ் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் ஜலதோஷம் அல்ல

ஒமைக்ரான் ஜலதோஷம் அல்ல. சில அறிக்கைகள் டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் பாதிப்பாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது என்றாலும், இன்னும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் ஒமைக்ரான் மற்றும் டெல்டா பாதிப்பினால் இறப்பவர்கள் உள்ளனர். மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதனும் ட்விட்டரில் “ஒமைக்ரான் சாதாரண ஜலதோஷம் அல்ல” என்று கூறியுள்ளார்.

விழிப்புடன் இருக்க வேண்டும்

மேலும், “அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை பரிசோதிக்கவும், ஆலோசனை செய்யவும் மற்றும் கண்காணிக்கவும் அமைப்புகள் இருப்பது முக்கியம். இந்த ஒமைக்ரான் பாதிப்புகள் திடீரென்று அதிகரிக்கலாம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு

லேசான தொற்று என அறியப்பட்டாலும், சில நாடுகளில் ஒமைக்ரான் காரணமாக இறப்புகள் பதிவாகியுள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பாதிப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், மக்கள் வீட்டிலேயே இருக்கவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் சுகாதார அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : யோகா கற்பவர்களின் ஆரம்ப கால தவறுகள்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.