ETV Bharat / sukhibhava

இதயத்தை இரும்பாக்கும் படி ஏறுதல்... இவ்வளவு நன்மைகளா! - ஓடுவது, நடப்பதை விட படி ஏறுதல் நல்லது

உடற்பயிற்சி செய்வதற்கு நேரமின்றி தவிக்கும் மக்களுக்கு, அவர்களின் அன்றாட வாழ்க்கையிலே மறைந்திருக்கும் முக்கிய உடற்பயிற்சியான படி ஏறுதல் குறித்து செய்தி தொகுப்பு தான் இது. அதில் நன்மைகளைப் பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க...

climbing stairs
படி ஏறுதல்
author img

By

Published : Jul 22, 2021, 5:22 PM IST

நாம் அன்றாட வாழ்க்கையில், நேரமின்மை காரணமாக உடற்பயிற்சி செய்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகிறோம். அனைவரும் ஜெட் வேகத்தில் பணத்தை சம்பாதிக்கும் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். இது பிற்காலத்தில் உடலில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

'படி ஏறுதல்' (stairs climbing)

எனவே, உடற்பயிற்சி செய்வதற்கு காலத்தை ஒதுக்கமுடியாத மக்களுக்காகவே, இருப்பது தான் 'படி ஏறுதல்' (stairs climbing) பயிற்சி. நாம் தினந்தோறும் எதிர்கொள்ளும் ஒன்றாக இருந்தாலும், அவற்றில் பல நன்மைகள் உள்ளன.

குறிப்பாக உங்களின் இதயத்தை பலமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று கார்டியோ வகை உடற்பயிற்சிகளைச் செய்வதைப் போன்று அதற்கு ஈடான நன்மைகளை தரக்கூடியது, படி ஏறுவது.

climbing stairs
இதயத்தை இரும்பாக்கும் படி ஏறுதல்

வெர்டிக்கல் பாதை

எனவே, வயதானோரின் உடல்நலத்தை அதிகரிப்பதில் நடைப்பயிற்சியும், படி ஏறுதலும் எவ்வளவு முக்கியம் என்பதை அறிய, ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், நடக்கும் போதும், ஓடும் போதும், நமது உடல் கிடைமட்ட (ஹரிசான்டல்) வடிவத்திலே நகர்கிறது.

எனவே, படி ஏறுதலைத் தவிர்க்காமல் அதனை செய்கையில், நமது உடல் செங்குத்து (வெர்டிக்கல்) வடிவத்தில் அதிகளவில் நகர்கையில், குறுகிய காலத்தில் அதிக கலோரிகளை குறைக்க உதவுகிறது. நமது கால் தசைகள், ஈர்ப்பு விசைக்கு எதிராக உடலை மீண்டும் மீண்டும் ஒவ்வொரு அடியிலும் உயர்த்துகிறது.

ஓடுவது, நடப்பதை விட இதில் நன்மை அதிகம்

இது ஓடுவது, நடப்பதை விட இது மிகவும் நன்மை பயக்கும். படிக்கட்டுகளை எல்லா இடங்களிலும் எளிதாக உபயோகிக்க முடியும். எனவே, இனிமேல் லிஃப்ட்-க்கு காத்திருக்காமல் படிக்கட்டுகளை நோக்கிப் பயணிக்கத் தொடங்குங்கள்.

climbing stairs
வயதானோரின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் படி ஏறுதல்

இந்தப் பயிற்சிக்கு நீங்கள் ஒரு சிறப்பு ஆடை அணிய வேண்டிய அவசியமில்லை. எந்த விதமான உடற்பயிற்சி சாதனங்களும் தேவைப்படாது. வீட்டுக்குள்ளேயே செய்வதால் வானிலை மாற்றங்களும் ஒரு தடையாக அமைந்திடாது.

நன்மைகள் என்னென்ன

  • படி ஏறுதல், ​​நாம் நடக்கும்போது விட இரு மடங்கு கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. பதினைந்து நிமிடம் படிக்கட்டு ஏறுதல் 250 கலோரிகளை எரிக்கிறது.
  • நாம் எவ்வித அழுத்தமும் இன்றி சாதாரணமாக படிக்கட்டு ஏறினால், நன்மைகள் சிறிய அளவிலே கிடைத்திடும். ஆனால், விறுவிறுப்பாக ஏறினால் நன்மைகள் பெரிய அளவில் கிடைத்திடும் எனக் கூறப்படுகிறது.
    climbing stairs
    படி ஏறுதல் நன்மைகள்
  • படிக்கட்டுகளில் ஏறுவது இதயத் துடிப்பை அதிகரிக்கிறது, தசைகளை உருவாக்குகிறது, கொழுப்பைக் குறைக்கிறது.
  • ஒரே நேரத்தில் நீங்கள் இரண்டு படிகள் ஏற முயற்சித்தால், அப்போது அதிகளவில் கலோரிகள் குறைக்கின்றன. ஏனெனில் கால் தசைகள் அதிகமாக வேலை செய்கின்றன.
  • 10 படிக்கட்டுகள் ஏறுவது, வாக்கிங்கில் 38 ஸ்டேப்ஸ் வைப்பதற்கு சமம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
    climbing stairs
    ஓடுவது, நடப்பதை விட படி ஏறுதலில் நன்மை அதிகம்

படிக்கட்டு ஏறுவது கால்களில் உள்ள முக்கிய தசைகளான ஹாம்ஸ்ட்ரிங்ஸ், குவாட்ரைசெப்ஸ்,காஃப், குளுட்டியல் தசைகளை இயக்குகிறது. இதன் விளைவாக, கால்கள் பலமடைகின்றன. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, பிற உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆளானவர்களுக்கு, படிக்கட்டு ஏறுவது பாதுகாப்பான சூழலில் வீட்டில் ஒரு நல்ல பயிற்சியாகும்.

இதையும் படிங்க: மழைக்காலத்தில் பிறப்புறுப்பை பராமரிக்க சில எளிய வழிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.