ETV Bharat / sukhibhava

90s கிட்ஸ்களை விட இவர்களுக்குதான் புற்றுநோய் பாதிப்பு அதிகம் - early onset cancers

சமீபத்திய ஆய்வின் முடிவில், ஆரம்பகால புற்றுநோய் பாதிப்பின் நிலை குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளது.

90s கிட்ஸ்களை விட இவர்களுக்குதான் புற்றுநோய் பாதிப்பு அதிகம்

author img

By

Published : Sep 21, 2022, 12:46 PM IST

புகை பிடித்தல், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல், அதிக உடல் எடை, சரியான தூக்கமின்மை ஆகிய காரணங்களால் பரவலாக புற்றுநோய் வருகிறது. இந்நிலையில் பிரிகாம், மகளிர் மருத்துவமனை மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் ஆரம்பகால புற்றுநோய் குறித்த பல்வேறு தரவுகள் கிடைத்துள்ளன.

முக்கியமாக 1990 களுக்கு பிறகு பிறந்தவர்களை விட1970 ல் பிறந்தவர்களுக்கு ஆரம்பகால புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதாவது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் சமீப காலங்களில் புற்றுநோய்க்கு உள்ளாகி வருகின்றனர்.

இதற்கு சுகாதாரம், குடும்ப பொருளாதாரம் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவை முதன்மை காரணியாக பார்க்கப்படுகிறது. இதில் உணவு முறை, வாழ்வியல் மாற்றம், சுற்றுச்சூழல் தகவமைப்புகள் ஆகியவற்றால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன.

அதிலும் உடல் பருமன் என்பது புற்றுநோய்க்கு முதல் அடித்தளமாக உள்ளது. மேலும் காற்று மாசுபாடு, பூச்சிக்கொல்லி மருந்துகளால் உருவாகும் விவசாயப்பொருட்கள், அதனை உட்கொள்வதால் வரும் பக்க நோய்களின் வீரியம் உள்ளிட்டவற்றால் முதன்மை புற்றுநோய் உருவாகிறது.

அதேநேரம் உலகளவில் குடல் புற்றுநோயால் அதிகமான எண்ணிக்கையில் பாதிக்கப்படுவதாக ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

மேலும் பல்வேறு உணவு கட்டுப்பாடுகளால் உண்டாகும் கருப்பை புற்றுநோய், தாய்ப்பால் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றத்தால் உண்டாகும் மார்பக புற்றுநோய் ஆகியவையும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு வருவதாகவும் ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையும் படிங்க: கொடூரமான செய்திகளை விரும்புகிறீர்களா...அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.