ETV Bharat / sukhibhava

கர்ப்பிணிகளுக்கு கோவிட்- 19 தடுப்பூசி செலுத்தலாமா?

author img

By

Published : Jul 6, 2021, 6:27 AM IST

ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கர்ப்பணிகள், 35 வயதிற்கு மேற்பட்டவர்கள், உடல் பருமனானவர்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள், கைகால்களில் ரத்தம் உறையும் அறிகுறி உள்ளவர்களுக்கு கோவிட் 19 பாதிப்பிற்கு பிறகான தாக்கம் அதிகமாக இருக்கும். அதே போல, கருத்தரித்திருக்கும் போது கர்ப்பிணி ஒருவர் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டால், பிரசவத்திற்கு பின்னர் விரைவாக அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

covid vaccination
covid vaccination

கோவிட்- 19 தொற்று பாதிப்பால் சுகாதார உள்கட்டமைப்பு பெரும் அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது, தொற்று பாதிப்பு மற்றும் தீவிரம், நோய்தொற்றின் நீண்ட கால விளைவு மற்றும் பிற நபர்களுக்கு நோய் பரப்பும் அபாயத்தைக் குறைக்கிறன்றது. சமீபத்திய வழிகாட்டு நெறிகளின் படி, தற்போது கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என அரசு அனுமதியளித்துள்ளது. இந்த நடவடிக்கையால், நாட்டில் 50 மில்லியன் உயிர்களில் தாக்கத்தை ஏற்படும் என்று தெரிவிக்கும் மருத்துவர்கள், ஒவ்வொருவரும் கோவிட்- 19 தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதே சிறந்த நீண்ட கால தீர்வாகும் என்றும் தெரிவிக்கின்றன.

இனிமேல் அனைத்து தாய்மாா்களும் கோவிட்- 19 தாக்கத்தில் இருந்து பாதுகாக்கப்படலாம். கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதின் நன்மைகள், தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் தத்துவார்த்த மற்றும் நீண்ட பாதிப்புகளை விட அதிகம்.

தடுப்பூசி செலுத்துவது பற்றி கர்ப்பிணிகள் தெரிந்து கொள்ளவேண்டிய விசயங்கள் குறித்து, முலுண்ட், ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மூத்த மகப்பேரியல் ஆலோசகர் மற்றும் மகப்பேறு மருத்துவர் சோனல் கும்தா, வாஷி ஹிரானிந்தனி மருத்துவமனை மகளிர் மருத்துவ நிபுணர் மற்றும் மகப்பேரியல் நிபுணர் மஞ்சிரி மேத்தா ஆகியோர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

கர்ப்பிணிகள் அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்:

கோவிட் 19 தொற்று பாதிப்பை கர்ப்பம் அதிகரிக்காது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலன கர்ப்பிணி பெண்கள் அறிகுறியற்றவர்களாகவோ அல்லது லேசான பாதிப்பு உள்ளவர்களாகவோ இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய உடல்நிலை வேகமாக மோசம் அடையக்கூடும், அது குழந்தையை பாதிக்கும்.

கர்ப்பிணிகள் கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதனாலேயே கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கர்ப்பிணிகளுக்கான கோவிட் 19 பாதிப்புகள்:

பெரும்பாலன (> 90 விழுக்காடு) தொற்று பாதிக்கப்பட்ட பெண்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமலேயே குணமடைந்து விடுகின்றனர். ஒரு சிலருக்கு விரைவாக ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகின்றது. அறிகுறியுள்ள கர்ப்பிணிகளில் கடுமையான நோய் பாதிப்பு மற்றும் இறப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம். எனவே தீவிரமான பாதிப்பு ஏற்பட்டால், மற்ற நோயாளிகளைப் போல கர்ப்பிணிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற அடிப்படை மருத்துவச் சிக்கல் உள்ள மற்றும் 35 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு தொற்று ஏற்படும் அபாயம் அதிகமுள்ளது.

தொற்றில் இருந்து மீண்ட கர்ப்பிணிகள்:

கோவிட் 19 தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்த கர்ப்பிணிகளும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான தகுதி உடையவர்களே. தனிநபர்களைப் பொறுத்து, தொற்று பாதிக்கப்பட்டதிலிருந்து 12 ஆவது வாரம் அல்லது தொற்றிலிருந்து மீண்ட 8ஆவது வாரத்தில் தடுப்பூசி செலுத்தும் காலம் மாறுபடும்.

தடுப்பூசியின் பக்க விளைவுகள்:

தற்போது கிடைக்கின்ற அனைத்து கோவிட் 19 தடுப்பூசியும் பாதுகாப்பானதே. தடுப்பூசி மற்ற நபர்களைப் பாதுகாப்பது போலவே கர்ப்பிணிகளை தொற்று மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. மற்ற மருந்துகளைப் போலவே கோவிட் 19 தடுப்பூசியும் சிறிது பக்கவிளைவுகளை கொண்டதே. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர், லேசான காய்ச்சல், ஊசி செலுத்திய இடத்தில் வலி, 1-3 நாள்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம்.

கர்ப்பமாக இருக்கும் போது தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா என்ற குழப்பம் ஏற்பட்டால். கீழ்கண்டவைகளை யோசியுங்கள்

* உங்களுக்கு கோவிட் 19 வெளிப்பாடு ஆபத்து

* கடுமையான நோயின் அபாயங்கள்

* தடுப்பூசியின் நன்மைகள்

* கர்ப்ப காலத்தில் தடுப்பூசி செலுத்துவது குறித்த வரைறுக்கப்பட்ட ஆனால் வளர்ந்து வரும் சான்றுகள்.

கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முன்பதிவு

அனைத்து கர்ப்பிணிகளும் தங்களுக்கான தடுப்பூசிக்காக கோவின் தளம் அல்லது கோவிட் 19 தடுப்பூசிக்கான முன்பதிவு மையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். சாதாரண மக்களைப் போலவே கர்ப்பிணிகளுக்கான முன்பதிவும் பொதுவாகவே உள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி, மகப்பேறு மருத்துவர்களுடன் இணைய வழி ஆலோசனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக பிரசவத்திற்கு முந்தைய கவனிப்பிற்காக பதிவு செய்யாதவர்களுக்கு இது மிகவும் அவசியம். தடுப்பூசி செலுத்திக் கொண்ட கர்ப்பிணிகளின் நீண்டகால தகவல்கள் நாம் சேகரித்து பாதுகாக்க வேண்டும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்:

* இரட்டை முகக்கவசம் அணிய வேண்டும்

* அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்

* தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கூட்டமான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு பின்னர் விரைவாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். உங்களின் சந்தேகங்கள் அனைத்தையும் மருத்துவரிடம் விவாதியுங்கள். தற்போதோ அல்லது பின்னரோ நீங்கள் கருத்தரிக்க விரும்பினால் பெற்றோர் கோவிட் 19 தடுப்பூசி பெறாலம் என்பதை நினைவில் கொள்க. கோவிட் 19 தடுப்பூசி உட்பட எந்த தடுப்பூசியும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது கருத்தரித்தலில் பிரச்னை ஏற்படுத்துகிறது என நிரூபிக்கப்படவில்லை. மிக முக்கியமாக தடுப்பூசியிலிருந்து தொற்று பரவுவதில்லை.

இதையும் படிங்க: உலகளவில் 31 விழுக்காடு உயிரிழப்பு இதய நோய்களால்தானாம்! எப்படி சமாளிப்பது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.