ETV Bharat / sukhibhava

கரோனாவுக்கு அப்புறமும் நீண்ட ஆயுசு வேணுமா? - இனி இதைச் சாப்பிடுங்க!

கரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்த பின்னரும்கூட அவர்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதைத்தான் போஸ்ட் கோவிட் சின்ட்ரோம் அதாவது நாள்பட்ட கோவிட் நோய் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆகையால் கரோனா குணமடைந்தால் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. உடலின் பிற உறுப்புகளைப் பாதிக்காதவண்ணம் அவற்றை வலுப்படுத்த வேண்டும்.

author img

By

Published : Jan 7, 2021, 2:45 PM IST

கரோனா பாதிக்கப்பட்டவர்கள் உணவு
எலுமிச்சை

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்குத் தங்களது உடலுக்கு வலுவூட்ட சப்ளிமென்ட் மாத்திரைகளை (supplement pills) மட்டும் எடுத்துக் கொள்வது எளிதான வழியாகத் தோன்றலாம். ஆனால் அதுவே சரியான முடிவா? என ஆராய்ந்தால் நிச்சயம் ‘சப்ளிமென்ட் மாத்திரைகளுக்கு’ நோ தான் சொல்வீர்கள்.

உடல்நலக் குறைவினால் ஏற்படும் பசியின்மையை மாற்றுவதும், தேர்வுசெய்யப்பட்ட ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதுமே சரியான முடிவாக இருக்கும் என்கிறார் ஊட்டச்சத்து வல்லுநரும்,மருத்துவருமான ரேணு கார்க். இது தொடர்பாக அவரிடம் விரிவாகப் பேசினோம்.

கரோனா பாதிக்கப்பட்டவர்களே கவனம்!

கரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துவருபவர்களுக்கு, தங்களது உடலின் உறுதியை வலுப்படுத்த அதிகளவில் வைட்டமின்கள் தேவைப்படும். இவர்களுக்கு வைட்டமின் ஏ, டி, ஈ முதலியவையும், மெக்னீசியம், துத்தநாகம் (zinc) போன்ற தாதுச்சத்துகளும் அதிகம் தேவைப்படும். இந்தச் சத்துகள் அடங்கிய உணவுகள் உங்களது ஆரோக்கியத்தைத் திருப்பித் தருவதோடு, நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.

இந்த டையட்டை நோட் பண்ணிக்கங்க

  • ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளும் புரதத்தின் அளவு 75 முதல் 100 கிராம் வரை இருக்க வேண்டும். கரோனா பாதிக்காத நபருக்குத் தேவைப்படுவதைவிட இந்த அளவு ஒன்றரை மடங்கு அதிகம்.
  • பருப்பு வகைகள், தானியங்கள், வேர்க்கடலை, பாதாம், பால், பால் சார்ந்த பொருள்கள், கடலைமாவு, கேழ்வரகு மாவில் செய்த பதார்த்தங்கள், பன்னீர், சோயா, முட்டை, மீன், இறைச்சி, கோழி, வெள்ளை எள் ஆகிய பொருள்களை உண்பதால் புரதச்சத்து அதிகரிக்கும்.

இந்த உணவில் ஊட்டச்சத்து அதிகம் இருக்கு

  1. பருவத்திற்கு ஏற்றபடி, காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான காய்களை எடுத்துக் கொள்ளாமல், அதன் நிறத்தின் அடிப்படையில் காய்கறிகளைத் தேர்வுசெய்யலாம்.

உதாரணமாக, சாம்பார் எனில் கேரட் (ஆரஞ்சு), பீன்ஸ் (பச்சை), கத்தரி (வெள்ளை (அ) கரு ஊதா), உருளை, விரும்பும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். காய்கறிகளிலும், பழங்களிலும் அதிகளவில் வைட்டமின்கள் இருப்பதால் விரைந்து குணமாக உதவும்.

vegetables
காய்கறிகள்
  • அதிக ஆற்றலைக் கொடுக்கும் முழு தானியங்கள், கோதுமை பிரெட், உருளைக்கிழங்கு, பாஸ்தா, அரிசி, வெல்லம், வறுத்த கொண்டைக்கடலை ஆகிவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள கேழ்வரகு, சோயாபீன், பால், பால் பொருள்கள், அத்தி, திராட்சை போன்றவற்றை எடுப்பது அவசியம்.
  • ஆரஞ்சு, எலுமிச்சை, ஸ்வீட் லைம், கொய்யா, காட்டு நெல்லிக்காய், பிராக்கோலி, பெல் பெப்பர், தக்காளி, பச்சை மிளகாய், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதால் வைட்டமின் சி மிகுதியாகக் கிடைக்கும்.
    note this diet
    இந்த டையட்டை நோட் பண்ணிக்கங்க

கொழுப்பும் முக்கியம்!

நெய், கிரீம், பாலாடைக்கட்டி, வீட்டில் தயார்செய்த வெண்ணெய், அவகடா, ஆலிவ் எண்ணெய், பாதம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான கொழுப்புச் சத்து கிடைக்கும். ஒரு நாளைக்கு உங்கள் உடலுக்கு 30 முதல் 40 கிராம் கொழுப்புத் தேவை.

தண்ணீர் பருகுங்கள்!

  • உடலுக்கு நீரேற்றம் அவசியம். அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் உடலை வறட்சியில்லாமல் நீரேற்றத்துடன் இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
  • சூப், குழம்பு வகைகள், மூலிகைத் தேநீர், காஃபின் அல்லாத பானங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
  • தாதுச்சத்து: முளைக்கட்டிய தானியங்கள் /புளித்த உணவுகளில் துத்தநாகம் காணப்படுகிறது.
  • மொத்தமாக உணவு சாப்பிடுவதைவிட, கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடலாம். இதனால் இரைப்பை அழற்சி, அமிலச் சுரப்பு, வாயுத்தொல்லை போன்ற பிரச்னைகளைத் தடுக்கலாம்.

கரோனாவிலிருந்து மீளும்போது தவிர்க்க...

தேநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். கரோனாவுக்குப் பின்னர் வரக்கூடிய முக்கியமான பிரச்சினைகள் மூச்சுத்திணறல், சோர்வுதான். இதிலிருந்து விடுபட காஃபின் கலந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும். காஃபின் இதயத்துடிப்பை அதிகரிக்கும், இதனால் ரத்த அழுத்தம், நீரிழப்பு ஏற்படும்.

seasonal food
பருவ உணவு

புகையும் மதுவும் கேடு

  • புகைப்பிடிப்பது நுரையீரலை நேரடியாகப் பாதிக்கும். புகைப்பிடித்தல், ஆல்கஹால் எடுத்துக் கொள்வது நோயெதிர்ப்புச் சக்தியைக் குறைத்து நோய்த்தொற்றுக்கு வாய்ப்பை வழங்கும்.
  • கரோனா உங்களது வாசனை, சுவையுணர்வுகளை மழுங்கச் செய்யலாம். இதற்காக வெளியில் உணவு எடுத்துக் கொள்ளும் முடிவை எடுக்க வேண்டாம். வீட்டு உணவுதான் ஆரோக்கியமும், அன்பும் கலந்தது. அதுவே உங்களை கரோனாவிலிருந்து மீளச் செய்யும். சுவையைவிட ஆரோக்கியம்தான் முக்கியம்.

நாள்பட்ட கோவிட் நோயைச் சரிசெய்ய வேண்டுமென்றால், அதற்கு மீண்டும் ஏதேனும் துணை பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி, யோகா போன்ற மூச்சுப் பயிற்சி, நல்ல உறக்கம் போன்றவைதான் அதற்குச் சிறந்த வழி என ஊட்டச்சத்து வல்லுநர் ரேணு கார்க் தெரிவித்தார்.

இதையும் படிச்சு பாருங்க: மாஸ்க் இல்லையா கவலைய விடுங்க; இதை பயன்படுத்தினாலே கரோனாவை தடுக்கலாம்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.