செம்பருத்தியில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி, செம்பருத்தி அடி வேர் முதற்கொண்டு, பூ வரை அனைத்திலும் மருத்துவக் குணம் நிறைந்துள்ளது. இது ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் இரண்டிலும் பல பயன்களை கொடுக்கிறது. பார்க்க அழகாக இருக்கும் இந்த செம்பருத்தியில், பல மருத்துவ குணங்களும் இருக்கிறது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
செம்பருத்தியினுள் என்னென்ன பலன்கள், பயன்கள் உள்ளன என்பது குறித்து ஈடிவி பாரத் வாசகர்களுக்கு விளக்குகிறார், இந்தூர் இயற்கை மருத்துவ நிபுணர் டாக்டர் ராஜன் சந்திரா.
மாதவிடாய் பிரச்னைகளுக்கு..!
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகளின் போது செம்பருத்தி பேருதவியாக உள்ளது. அது எப்படியென்றால், செம்பருத்தின் மலரை பொடியாக்கி அதை தேநீராக பருகிவந்தால், மாதவிடாய் சுழற்சி சரிவர இருக்கும்.
அழகில் செம்பருத்தியின் பங்கு...!
முக பராமரிப்பிற்கு செம்பருத்தி அதிகளவு பயன்படுகிறது. இது போடோக்ஸ் ஆலை என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், செம்பருத்தியின் பாகங்கள் மேனியை மினுமினுக்க வைக்கிறது. இதை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், பருக்கள், கருவளையங்கள் இருக்காது. அதுமட்டுமின்றி எப்போதும் இளமையாக நாம் இருக்க இந்த செம்பருத்தி பெரிதும் உதவுகிறது.
கூந்தல் பராமரிப்பில் எப்படி?
முடி உதிர்தல், கடினத்தன்மை உள்ளிட்ட முடி தொடர்பான ஒவ்வொரு பிரச்னையிலும் செம்பருத்தியின் பங்கு அலப்பரியது என்றே சொல்லலாம். ஏனென்றால் இதன் இலை முதல் பூ வரை அனைத்தும் முடியை மேம்படுத்த உதவுகிறது.
மற்றவை...!
கூந்தல், தோல் ஆகியவற்றிக்கு மட்டும் தான் செம்பருத்தி மகத்துவம் காட்டுமா? என்றால் இல்லை. செம்பருத்தி, உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்னைகள் உள்ள நோயாளிகளுக்கு செம்பருத்தி செடி இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் மருந்தாக செயல்படுகிறது. இதன் நுகர்வு இதயத்துடிப்பை இயல்பாக்குகிறது.
இதில் ஏதும் தீங்கு இருக்கா?
ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், ஹோமியோபதி அல்லது அலோபதி இப்படி எந்த மருத்துவத்தின் கீழ் நீங்கள் செம்பருத்தியை எடுத்துக்கொண்டால், அதற்கு முறையான மருந்துவ நிபுணரின் ஆலோசனையை கேட்பது நல்லது.
இதையும் படிங்க...மகத்துவம் நிறைந்த கோதுமை புல்...!