ETV Bharat / sukhibhava

பெருந்தொற்றுக்கு பிந்தைய வாழ்க்கைக்கு நீங்கள் தயாரா?

author img

By

Published : Jul 24, 2021, 5:38 PM IST

இந்தியா, உலகம் முழுவதிலும் கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிகள் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. இருந்த போதிலும் சாலைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன; பள்ளி, கல்லூரிகள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படாத நிலையில், கடைகள் திறக்கப்பட்டு, மெல்ல அவை தனது இயல்பான வணிகத்தை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கின்றன.

The 'Unlock' Life
பெருந்தொற்றுக்கு பிந்தைய வாழ்க்கை

கோவிட்- 19 பெருந்தொற்று, நம்மை வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் புதிய நடைமுறைக்கு மாற்றியுள்ளது. 100 விழுக்காடு நம்பிக்கையுடன் வீட்டைவிட்டு இப்போதும் நம்மால் வெளியேற முடியவில்லை. இந்த புதிய நடைமுறை மக்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய எண்ணங்களை அதிகப்படுத்தியுள்ளது. இந்த பெருந்தொற்று, மக்களிடம் மனநலப் பிரச்னைகளையும் அதிகப்படுத்தியுள்ளது.

மக்கள் ஊரடங்கிலிருந்து வெளியேறி தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயற்சிக்கிறார்கள். அவர்கள் கோவிட்- 19 வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஏனெனில் கரோனா வைரஸ் முழுமையாக நீங்கவில்லை. மேலும் உருமாற்றம் அடைந்துள்ளது. இந்த நிலையில், ஊரடங்குக்கு பிந்தைய வாழ்க்கை முறை எவ்வாறு இருக்க வேண்டும் எனப் பல்வேறு சுகாதார நிபுணர்கள் தங்களின் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துள்ளனர்.

கவலைகள் மற்றும் மனஅழுத்தத்தை எவ்வாறு கையாள்வது

'இந்த கோவிட் 19 பெருந்தொற்று ஏற்படுத்தி இருக்கும் நிச்சயமற்றத் தன்மை, நெருக்கமானவர்களின் உயிரிழப்பு, பொருளாதாரப் பாதுகாப்பின்மை போன்ற காரணங்கள் பலரின் சிந்தனை முறைகளில் மாற்றத்தைத் ஏற்படுத்தி இருக்கும்' என்கிறார், டேராடூனை சேர்ந்த மூத்த உளவியல் நிபுணர் மருத்துவர் வீணா கிருஷ்ணன். முழு ஊரடங்கு தன்னோடு கொண்டு வந்திருக்கும் புதிய வாழ்க்கை முறை, வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கும் நடைமுறை, வேலை இழப்பு போன்றவை வயதான, இளைஞர்களியையே பிரச்னை எழுவதற்கு வழிவகுத்திருக்கிறது.

பெருந்தொற்று பயம் காரணமாக, மக்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்வதை நிறுத்திக் கொண்டனர். சமூக கூடுகைகள் இல்லாமல் போய்விட்டன. வைரஸ் தொற்றை தவிர்ப்பதற்காக பழங்கள், காய்கறிகள், பொருள்களை நாம் சுத்தம் செய்ய தொடங்கியுள்ளோம். இந்த புதிய பழக்க வழக்கங்கள், மக்களிடையே சொல்ல முடியாத அச்ச உணர்விற்கு வழிவகுத்திருக்கிறது. உலகம் இப்போது தனது இயல்பு நிலைக்கு வர முயற்சிக்கிறது. அலுவலகத்திற்கு சென்று வேலை பார்க்கும் மக்கள் முகக்கவசம், கைகளைக் கழுவுதல், தனிமனித இடைவெளியில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

மனநிலையைச் சமமாக வைத்துக்கொள்ள ஒருவர் எதிர்மறை எண்ணமுடையவர்களிடமிருந்தும், எதிர்மறை எண்ணங்களில் இருந்தும் தள்ளி இருக்க வேண்டும். முறையான தகுந்த இடைவெளியுடன் சமூக கூடுகைகளை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். மனநிலையை ஒருமுகப்படுத்தும் தியானம், யோகா மற்றும் இயற்கையான விளையாட்டு முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

அத்தியாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுக

இந்தூரிலுள்ள ஆப்பிள் மருத்துவமனை மருத்துவர் சஞ்சய் ஜெயின், அத்தியாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிக் கூறும்போது, "கரோனா பெருந்தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கி விடவில்லை. அதனால் பெருந்தொற்று நடைமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடங்களில் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முடிந்த வரை உணவு மற்றும் தண்ணீரை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் சந்தை, அலுவலகம் மற்றும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளுக்குச் செல்லும்போது, N95 முகக்கவசத்தை மட்டுமே அணிய முயற்சி செய்யுங்கள் என வலியுறுத்துகிறார்.

வேலைக்காக அலுவலகம் செல்பவர்கள், கைகளின் சுகாதாரம், தகுந்த இடைவெளி ஆகியவைகளில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக கழிப்பறை, மின்தூக்கி (லிப்ட்) போன்ற மக்கள் நெரிசல் உள்ள பகுதிகளுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அலுவலகத்தில் இருக்கும்போது, சாத்தியமிருக்கும் பட்சத்தில், உங்கள் இருக்கையிலிருந்து எழுந்து திறந்த வெளிக்குச் சென்று சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். சோப்பு மற்றும் நீர் கொண்டு கைகளைக் கழுவுங்கள்; அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்துவது நல்லதில்லை. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்திடுங்கள். எல்லாவற்றையும் விட முக்கியமானது தடுப்பூசி போட்டுக் கொள்ளவது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருவதால், கோவிட்- 19 பெருந்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுங்கள். உங்களின் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்து கவனமாக இருங்கள். மன அழுத்தம் இல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள், சுகாதார ஒழுங்குமுறைகளை கடைபிடியுங்கள்.

இதையும் படிங்க: ஸ்டெராய்டுகளால் ஏற்படும் எலும்பு இறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.