ETV Bharat / sukhibhava

பாடி வாஷ் vs ஷவர் ஜெல்; எது சிறந்தது?

difference between body wash and shower gel: பாடி வாஷ் மற்றும் ஷவர் ஜெல் இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? இதன் நன்மைகள் என்ன? என்று பார்க்கலாம்.

பாடி வாஷ் மற்றும் ஷவர் ஜெல் எது சிறந்தது என்று பார்க்கலாம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 7:00 PM IST

சென்னை: உலகம் நவீனமயமாதலைத் தொடர்ந்து எல்லா செயல்களிலும் இந்த நவீனம் என்பது உருவாகி வருகிறது. நவீனம் என்பது காலையில் எழுந்து பல் துலக்குதலில் இருந்து தொடங்குகிறது. செங்கற்பொடி, பல்பொடியாகி, பற்பசையாகி தற்போது மவுத் வாஷாக உருப்பெற்றது. அது போல குளிப்பதற்கு கரம்பை மண், கடலை மாவு, நலங்கு மாவு போன்றவற்றை பயன்படுத்திக் கொண்டிருந்த நமக்கு சோப் அறிமுகமானது. இப்போது பாடி வாஷ் (Body Wash), ஷவர் ஜெல் (shower Gel) போன்றவை சந்தைக்கு வந்துவிட்டன.

சோப் உபயோகப்படுத்த விரும்பாத பலர், பாடி வாஷ் மற்றும் ஷவர் ஜெல் உபயோகப்படுத்துவதற்கு விரும்புகின்றனர். ஆனால் பாடி வாஷ் மற்றும் ஷவர் ஜெல் இந்த இரண்டில் எது பெஸ்ட்?, இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? இதன் நன்மைகள் என்ன? என்று குழம்புகின்றனர். இந்த செய்தித் தொகுப்பில், பாடி வாஷ் மற்றும் ஷவர் ஜெல் இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? இதன் நன்மைகள் என்ன? என்று பார்க்கலாம்.

சோப்பை விட பாடி வாஷ் மற்றும் ஷவர் ஜெல் பெஸ்ட்: சோப்பை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது, சோப்பில் நீர் பட்டு, அதில் பாக்டீரியாக்களும், பூஞ்சைகளும் உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனால் தோல் நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் உள்ள எல்லாரும் சோப்பை உபயோகப்படுத்த முடியாது.

ஏனெனில் ஒருவர் பயன்படுத்தியதை மற்றொருவர் பயன்படுத்தினால், அதன் மூலம் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்தும் செல்ல முடியும். சோப்புடன் ஒப்பிகையில் பாடி வாஷ் மற்றும் ஷவர் ஜெல்லை எளிதாக பயன்படுத்த முடியும். நேரத்தை மிச்சப்படுத்த முடியும். சோப்பை விட குறைவான pH அளவை உடையது.

பாடி வாஷ் (Body Wash): பாடி வாஷ் என்பது திரவ வடிவிலான ஒரு க்ளன்சிங் பொருள் (Cleansing Product). இதில் ஹார்ஷான பொருட்கள் ஏதும் இல்லாததால் சரும பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. குளித்த பின் சருமம் வறண்டு காணப்படுவது, சருமத்தில் அரிப்பு போன்றவை ஏற்படாது. ஏனெனில் பாடி வாஷ் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது.

ஆகையினால் எல்லாரும் பாடி வாஷை பயன்படுத்தலாம். உங்களுக்கு சொரியாசிஸ், முகப்பரு பிரச்சினைகள் போன்றவை இருப்பின், தோல் மருத்துவரை அணுகி உங்களுக்கேற்ற பாடி வாஷை தேர்ந்தெடுப்பது நல்லது. பாடி வாஷில் கிளிசரின் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. இவை சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. சருமத்தை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்களையும் நீக்காது.

பாடி வாஷில் ஓட்ஸ் மற்றூம் தூளாக்கப்பட்ட பாதாமி பிட்ஸ் இருத்தல் நல்லது. மேலும் இதில் மிதமான நறுமணம் இருக்கும். இஇது வறண்ட சருமம் மற்றும் சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.

ஷவர் ஜெல் (Shower Gel): ஷவர் ஜெல் உடலை ஆழமாக சுத்தம் செய்யவும், சருமத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இந்த திரவ க்ளன்சரில் மிதமான சர்பாக்டாண்ட்கள் உள்ளன. இவையே உடலை ஆழமாக சுத்தம் செய்வதற்கு உதவுகின்றன. உடலில் உள்ள பாக்டீரியாக்களையும் ஒழிக்கின்றன. இது ஒரு ஜெல் பதத்தில் கிடைக்கிறது.

இதில் தண்ணீர் சேர்த்தவுடன் நுரை உருவாகும். சுற்றுச்சூழல் மாசுக்களால், சருமத்தை உருவாகும் அழுக்குகளையும், வியர்வைகளையும் வெளியேற்றும். இவை சருமத்தை வறட்சியாக்கும். சற்று ஹார்ஷாக இருக்கும். தலை முடியை அலசுவதற்கும் ஷவர் ஜெல்லை பயன்படுத்தலாம். பாடி வாஷுடன் ஒப்பிடும் போது அதிக நறுமணத்தை தரும். சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு எரிச்சலை உருவாக்கும்.

மேற்கூறிவற்றை நினைவில் கொண்டு தங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: மழைக்காலத்திற்கு ஏற்றவாறு எப்படி மேக்கப் போடனும்னு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.