ETV Bharat / sukhibhava

'அழுதல்' உங்கள் ஆரோகியத்திற்காக எடுக்கும் தைரியமான முடிவு!

அழுவதைக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களா நீங்கள்? அப்போது நீங்கள் முக்கியமான நான்கை இழந்திருக்கிறீர்கள்.

4-reasons-crying-is-beneficial-for-your-health-and-well-being

author img

By

Published : Dec 14, 2020, 2:47 PM IST

அழுவது என்பது ஒரு உணர்ச்சி நிலை. இந்த உணர்ச்சி நிலையில், சோகம், கோபம், மகிழ்ச்சி ஆகிய மூன்றும் அதிகரிக்கும்போது நீங்கள் அழலாம் அல்லது உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

ஒருவேளை நீங்கள் அழுமூஞ்சியாக இருந்து அழுதுவிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எப்படி?

அழுவதை உணர்ச்சியில் மட்டுமல்ல, அனிச்சை செயல்களிலும் சேர்க்கலாம். ஏனெனில், அழுதல் உயர்ந்த உணர்ச்சிகளுடன் தொடர்புடையது. அழுவதை நீங்கள் பலவீனத்தின் அறிகுறி என்று கருதலாம். ஆனால் உண்மையில், அழுதல் என்பது உங்கள் ஆரோக்கியத்திற்காக எடுக்கும் தைரியமான முடிவாகும்.

மெடிக்கல் நியூஸ் டுடேவின்(Medical News Today) கூற்றுப்படி, கண்ணீரை மூன்று வகையாக பிரிக்கலாம்.

  • வளர்சிதை மாற்ற கண்ணீர் சுரப்பி(Basal): இது உடலில் உள்ள ஒருவகைப் புரதம் நிறைந்த பாக்டீரியா எதிர்ப்பு திரவம். இந்த திரவம் கண்ணீர் குழாய்களால் தொடர்ந்து சுரக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் நாம் கண் சிமிட்டும்போது கண்களை ஈரமாக்குகிறது.
  • அனிச்சை கண்ணீர்(Reflex): இது காற்று, புகை, தூசு, வெங்காயம் உள்ளிட்ட காரணங்களால் தூண்டப்பட்டு வெளியேறுபவை. இது கண்களை எரிச்சலிலிருந்து பாதுகாக்க திரவத்தை வெளியேற்றுகிறது.
  • உணர்ச்சி(Emotional): இது உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு வெளியேறும் திரவமாகும். உயர்ந்த உணர்ச்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த திரவம் வெளியேறுகிறது. இதற்கும் ஹார்மோன்களுக்கும் தொடர்புண்டு.

இதில் கடைசியாக குறிப்பிடப்பட்ட உணர்ச்சி திரவம் வெளியேறும்போது, அது பின்வரும் நான்கு வகையில் உங்களின் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கிறது.

  • மனநிலையை சமநிலைப்படுத்துகிறது

அழுவது ஒருவரின் மன தைரியத்தை கணிசமாக உயர்த்த உதவுகிறது. பெரும்பாலான ஆய்வுகள் மக்கள் அழுத பின்பு, தங்களின் மனநிலையை நன்றாக உணர்வதாக சுட்டிக்காட்டுகின்றன. அதுவும் நெருங்கிய நண்பர் ஒருவரின் முன் அழும்போது, முடிவில் அது மகிழ்ச்சியாக உணர வைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

  • மன அழுத்தத்தை நீக்குகிறது

மன அழுத்தத்தின்போது அழுவது என்பது அதிலிருந்து உங்களை விரைவாக வெளிவர உதவும். வழக்கமான கண்ணீரைவிட மன அழுத்தத்தின்போது அதிக அளவு ஹார்மோன்கள் தொடர்புடைய கண்ணீர் வெளியாகும். அப்படி நீங்கள் அழுது முடித்தவுடன், ஒரு பெரிய கட்டி கரைந்துவிட்டதுபோலத் தோன்றும். நீங்கள் சுதந்திரமாக சுவாசிப்பீர்கள்.

  • உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்துகிறது, உடல் வலியைக் குறைக்கிறது

யாருக்கும தெரியாமல் இரவில் நீங்கள் அழும் அழுகை நல்ல அழுகை, காலையில் வீங்கிய கன்னங்களை பரிசளிக்கும். ஆனால் அது உணர்ச்சிகரமான உங்களின் வலியை குறைத்துவிடும். அறிவியல் முறையில் சொன்னால், நீங்கள் அழுத பிறகு உங்கள் உடலில் உள்ள ஆக்ஸிடாஸின், எண்டோஜெனஸ் ஓபியாய்டுகள் வெளியேற்றப்படுகின்றன. இவை வெளியேறினால் நீங்கள் உணர்ச்சிவசப்படுதல், உடல் வலிகளை எளிதாக உணர்வீர்கள். சுலபமாக உடலை சாந்தப்படுத்தும்.

  • தூக்கத்தை மேம்படுத்துகிறது

ஆம் இது எங்களுக்கே தெரியும் என பலரும் சொல்லக் கூடியாதுதான். ஏனெனில் 'அழுகை உங்களுக்கு நல்ல அருமையான தூக்கத்தை அளிக்கவல்லது. ஒரு வேளை நீங்கள் விடாகண்டன், கொடாகண்டன் என்பது போல அழுவதைக் கட்டுப்படுத்தி மனதில் பெரும் கடலாக சேர்ந்து வைத்திருந்தால், நீங்கள் இரவில் விரைவாக தூங்காதவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. வாழ்வில் உயர்ந்த உணர்ச்சிகளுக்கு கண்ணீரில் மதிப்பளியுங்கள். உயர்ந்த உணர்ச்சிகள் கண்ணீர் மடை திறந்துவரும்போது கட்டுப்படுத்தாதீர்கள்.

இதையும் படிங்க: உரிக்காமலேயே கண்ணீர் வரவைக்கும் வெங்காயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.