சென்னை: நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்றால் காலை நேர உணவு மிக அவசியமான ஒன்று. இன்றைய அவசரமான உலகில் பலரும் காலை நேர உணவுகளைத் தவிர்க்கின்றனர் அல்லது ஆரோக்கியம் அற்ற உணவுகளைப் போகும் போக்கில் உட்கொள்கின்றனர். இதுபோன்ற செயல்கள் உங்கள் ஆரோக்கியத்தை எந்த வகையில் பாதிக்கும்? காலை நேர உணவுகளாக எதை எடுத்துக்கொள்ளலாம்? எதை உட்கொள்ளக் கூடாது என்பதைப் பார்க்கலாம்.
இதையும் படிங்க: வரப்போகுது பண்டிகைக்கால விற்பனை... ஆன்லைனில் வாங்க இது சரியான வாய்ப்பா?
- சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்; செயற்கை இனிப்பூட்டிகள் மற்றும் வெள்ளை மாவு (மைதா) போன்றவைகள் மூலம் தயாரிக்கப்படும் அனைத்து உணவுகளுமே ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது குளிர்பானங்கள், துரித உணவுகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள் காலை நேர உணவுக்கு முற்றிலும் உகந்தது அல்ல. இதுபோன்ற உணவுகள் தற்காலிகமாகப் பசியை அடக்கி மீண்டும் பசியைத் தூண்டுவதுடன் கெட்ட கொழுப்புகள் ரத்தத்தில் படிவதற்கு காரணமாக அமையும். மேலும் நாளடைவில் டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற உடல்நல கோளாறுகள் ஏற்படலாம் என உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
காலை உணவில் சாப்பிடக் கூடாதவை | காலை உணவில் சாப்பிடக்கூடியவை |
|
|
காலை உணவுகளை நீங்கள் தேர்வு செய்யும் வாழ்வியல் முறைதான் உங்கள் ஒட்டுமொத்த வாழ்நாளின் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்யும். இதைக் கவனத்தில் கொண்டு நாள்தோறும் நீங்கள் உட்கொள்ளும் உணவுகளைத் தேர்வு செய்யுங்கள். காலை உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாத பட்டியலில் இருக்கும் உணவுகளை நீங்கள் உட்கொள்ளும்போது, செரிமான பிரச்சனை, அல்சர், உடல் பருமன், நீரிழிவு நோய், இதயம் தொடர்பான நோய்கள் எனப் பல உடல்நல உபாதைகள் ஏற்படலாம்.
அதேநேரம், காலை நேரம் உட்கொள்ள வேண்டிய உணவுகள் பட்டியலில் உள்ள உணவுகளை உட்கொள்ளும்போது ஒரு நாளுக்குத் தேவையான ஒட்டுமொத்த ஆற்றல் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும். இதனால் மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கைச் சூழலை உருவாக்கலாம்.
அதிலும் குறிப்பாகக் காலை உணவு என்பது நேரத்திற்கு உட்கொள்ள வேண்டும் என்பது அவசியம். காலையில் 8 மணிக்கு உணவு உட்கொள்கிறீர்கள் என்றால் அதை நாள்தோறும் உங்கள் உணவு அட்டவணை நேரத்தில் குறிப்பிட்டுக்கொள்ளுங்கள். இது உங்கள் உடல் கடிகாரத்தின் செயல்பாட்டைச் சீராக வைத்து ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாக்கும்.
இதையும் படிங்க: எதை பார்த்தாலும் பயம், என்ன செய்தாலும் பயம்: இதற்கு என்னதான் தீர்வு.?