விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சித்தனேந்தல் பகுதியில் நிலப் பிரச்னை காரணமாக சகோதரர்களான சுப்பிரமணியன், கிருஷ்ணன் ஆகியோருடன் முருகன் என்பவரும் அ. முக்குளம் காவல் நிலையம் சென்றனர். அங்கு பேச்சுவார்த்தையில் முருகனை காவலர்கள் அடித்ததாகக் கூறப்படுகிறது.
அதனால் மனமுடைந்த முருகன் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் மன உளைச்சல் காரணமாக ஒருவர் தற்கொலை!