விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேல ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜ் (32). இவர் சென்னையிலுள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றிவந்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள தனது சகோதரியின் புதுமனை புகுவிழாவிற்காக நேற்று வந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து நேராக கடலூர் சென்று தனது மனைவி அக்சயா பானுவை அவரது வீட்டில் இறக்கிவிட்டு, மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கிளம்பியுள்ளார். அப்போது மடவார்வளாகம் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோரத்திலிருந்த கல் மண்டபத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த பண்டியராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகரக் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.