விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் கூரை பள்ளிக்கூட தெரு பகுதியில், கல்யாணகுமார் அவரது தம்பி முருகன் இருவரும் அருகருகே உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (செப்.16) அண்ணன், தம்பி இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தம்பி முருகன் அண்ணன் கல்யாணகுமாரை பீர் பாட்டிலால் தலையில் அடித்துள்ளார்.
இதில் அண்ணன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து தம்பி முருகன் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.
அருகில் உள்ளவர்கள் தளவாய்புரம் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலை அடுத்து காவல்துறையினர் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், தம்பி முருகன் மீது வழக்குப்பதிவு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.