விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனை சார்பில் யோகா, இயற்கை மருத்துவப் பிரிவு மருத்துவர் அமுதா, "ராஜபாளையம் பகுதிகளில் கரோனா தொற்று அதிகம் ஏற்பட்டு அதில் பாதிக்கப்பட்டவர்கள் முழு சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் சீல்வைக்கப்பட்ட பகுதிகள், ராஜபாளையம் நகர்ப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் காவல் துறையினர் நோய்த்தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்விதமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் பத்மாசனம் உள்ளிட்ட பலவகை ஆசனங்கள் அளிக்கப்பட்டன. குறிப்பாக உப்பு கலந்த மிதமான சுடு நீரால் வாயைக் கொப்பளிப்பது, முகத்திற்கு ஆவி பிடித்தல் மிதமான சுடுநீரைப் பருகுதல், சூரிய ஒளி குளியல் எனப் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடிய உணவு வகை பட்டியல் காவலர்களுக்கு அளிக்கப்பட்டது" என்றார்.
இந்த உடற்பயிற்சி, யோகா ஏற்பாடுகளை ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் நாகசங்கர் செய்திருந்தார்.
இதையும் பார்க்க:சேலம் அரசு மருத்துவமனையில் குருதிக் கொடை முகாம்!