ETV Bharat / state

காதலிப்பதாக கூறி 17 வயது சிறுவன் கடத்தல்.. போக்சோவில் 33 வயது பெண் கைது.. - Sexually Assaulting with 17 year old boy

விருதுநகரில் 17 வயது சிறுவனை காதலிப்பதாகக் கூறி சிறுவனை கடத்திச் சென்ற 33 வயது பெண்ணை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 1, 2023, 9:45 PM IST

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே 17 வயது சிறுவனை காதலிப்பதாகக் கூறி, கன்னியாகுமரி வரை கடத்திச் சென்ற 33 வயது பெண்ணை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். ராஜபாளையம் அருகே உள்ள தாட்கோ காலனியை சேர்ந்தவர் தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியிலுள்ள ஒரு செங்கல் சூளையில் வேலைப் பார்த்து வந்தார்.

அதே செங்கல் சூளையில் வேலைப் பார்த்து வந்த சேத்தூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. ஜனவரி 19ஆம் தேதி இருவரும் அவரவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் சேத்தூர் மற்றும் வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.

இந்த விசாரணையில் இருவரும் கன்னியாகுமரியில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று இருவரையும் அழைத்து வந்த சேத்தூர் காவல்துறையினர் தீபாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு இதுபோன்று மாணவ மாணவிகள், மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் பாலியல் விவகாரங்களை தடுக்க உதவி மையங்கள் மற்றும் புகார் எண்கள் அறிவித்துள்ளது.

இதன் மூலம் அவர்கள் பயப்படாமல் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் பற்றிய புகார்களை தெரிவிக்கலாம். அந்த வகையில் 14417- என்ற உதவி எண்ணுக்கு அழைத்து தங்களின் புகார்களை பதிவுசெய்யலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காதல் தோல்வி - போதையில் கார் கண்ணாடிகளை உடைத்த இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.